தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ஆன ரஜினி கடந்த சில மாதங்களுக்கு முன்பு டிஸ்கவரி சேனலில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். வனப்பகுதியில் உள்ள இடர்களை எவ்வாறு சந்திப்ப.து அங்கு உள்ள விலங்குகளிடமிருந்து எவ்வாறு நம்மை பாதுகாத்துக் கொள்வது போன்ற பல விஷயங்களை மக்களுக்கு வெளிப்படுத்தும் நிகழ்ச்சி மேன் வெர்சஸ் வேர்ல்ட்.
இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி ஒரு ஒரு ஒரு முறை கலந்துள்ளார். அதன் பிறகு தமிழ்நாட்டில் சூப்பர் ஸ்டார் ரஜினி கலந்து கொண்டார்.இந்த நிகழ்ச்சியின் டிஆர்பி இதுவரை அந்த சேனல் கண்டிராத அளவிற்கு மிகவும் அதிகமான டிஆர்பியை பெற்று தந்தது.
அதன்பிறகு தற்போது கர்நாடக மாநிலத்தில் உள்ள டிஸ்கவரி சேனலில் தொகுப்பாளராக பணியாற்ற உள்ள பிரபல நடிகரான பிரகாஷ்ராஜ். “வைல்ட் கர்நாடகா” என்று பெயர் சூட்டப்பட்டுள்ள இந்த நிகழ்ச்சியை தற்போது இவர் தொகுத்து வழங்க உள்ளதாக தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.