கொரானோ பரவலை தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் ஒரு இடத்தை விட்டு மறு இடத்திற்கு செல்ல முடியாததால் தனது பண்ணை வீட்டில் தங்கி இருந்த 31 வெளிமாநில தொழிலாளர்களை தற்போது பாதுகாப்பாக அவர்களின் வீட்டில் அனுப்பி வைக்க இருப்பதாக தெரிவித்துள்ளார் நடிகர் பிரகாஷ் ராஜ்.
பிரகாஷ்ராஜ் அறக்கட்டளையின் மூலமாக ஆயிரம் குடும்பங்களின் தேவைகளை பூர்த்தி செய்திருப்பதாகவும், வீட்டுக்கு செல்ல முடியாத தொழிலார்கள் 31 பேரை தனது வீட்டில் வைத்து பராமரித்து இருந்த இவர் தற்போது அவர்களை பாதுகாப்பாக அனுப்பி வைக்கும் வேலைகளை அவர் தொடங்கி இருப்பதாக கூறியுள்ளார்.
இதனை தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.