தமிழ் சினிமாவில் குணச்சித்திர நடிகராகவும் வில்லனாகவும் வலம் வந்தவர் பொன்னம்பலம். இவர் தமிழ் சினிமாவின் ஆரம்ப காலத்தில் ஒரு ஸ்டன்ட் கலைஞனராக தன் வாழ்க்கையை தொடங்கினார். இவர் கபாலி என்று தான் என்று பலருக்கு தெரியும்.
இதன் பிறகு இவர் நாட்டாமை, முத்து ஆகிய படங்களில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானவர். இது தொடர்ந்து பல படங்களில் வில்லனாக நடித்துள்ளார். சமீபகாலமாக சில படங்களில் குணசித்திர வேடங்களிலும் நடித்து வருகிறார்.
இவர் பிக் பாஸ் சீசன் 2 வில் கலந்து கொண்டு மீண்டும் மக்கள் மத்தியில் ஒரு நல்லதொரு இடத்தைப் பிடித்தார். அதன்பிறகு இவர் தற்பொழுது சில படங்களில் கமிட்டாகி நடித்து வந்துள்ளார். பொன்னம்பலத்தின் உடல்நிலை மிகவும் மோசமானதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த தகவல் ரசிகர்களிடையே மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்த புகைப்படங்களும் இணையத்தில் உலா வருகின்றன. இந்த நேரத்தில் இவரது மருத்துவ செலவை நடிகர் கமலஹாசன் ஏற்றுக் கொண்டுள்ளார். மேலும் இவருடைய குழந்தைகள் இரண்டு பேரின் படிப்பு செலவையும் அவர்களே ஏற்றுள்ளார் என்றும் செய்திகள் வெளிவந்துள்ளது. கூடிய விரைவில் பொன்னம்பலம் குணமடைய வேண்டும் வேண்டும் என்று பலரும் தற்போது பிரார்த்தனை செய்து வருகின்றனர்.