சமீபகாலமாக இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே லடாக்கில் எல்லை பிரச்சினை நடந்து வருகிறது. எல்லைகளில் படைகளை குவித்து சீனா அத்துமீறி இந்திய ராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் இந்திய ராணுவ 20 பேரும் சீனர்கள் 30 பேருக்கு மேற்பட்டோர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து மிகப் பெரிய அளவில் சர்ச்சை எழுந்ததால் இரு நாட்டு ராணுவமும் எல்லைகலில் படைகளை குவித்து வருகின்றது. இந்தியர்கள் சீனப் பொருட்களை வாங்க வேண்டாம் எனவும் பிரபல நடிகர் நடிகைகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
அதுபோல நடிகர் மற்றும் இயக்குனரான பார்த்திபன் தனது ட்விட்டர் பக்கத்தில் சீன பொருட்களை புறக்கணிக்க வேண்டும் என்று டுவிட் செய்திருந்தார். மேலும் தற்போது சீன பெருஞ்சுவரை உடைப்போம் என்பதுபோல அவரது ஸ்டைலில் அசத்தலான ஒரு ட்வீட்டை பதிவிட்டுள்ளார். அதில் புடவையே போனாலும் பார்டரை விட்டு கொடுக்கக்கூடாது இதென்ன பார்டர் பரோட்டா வா பங்கு போட்டுத் திங்க.. பார்டர் எவ்வளவு முக்கியம் என்பதை பாருங்கள்.. இந்த மெசேஜ் இல் என்றும் தெரிவித்துள்ளார்.