சென்னை: சென்னை நந்தனம் விரிவாக்கம் ஏழாவது தெருவில் வசித்து வந்த நடிகரும் இயக்குனருமான பார்த்திபன் வீடு அமைந்துள்ளது. இவர் வீட்டின் கீழ் தளத்தில் அவர் அலுவலகம் செயல்பட்டு வந்திருந்தது அதே தளத்தில் அவருடைய பத்துக்கும் மேற்பட்ட அசிஸ்டன்களும், மேலாளர்களும் வசித்து வருகின்றனர்.
இந்த நிலையில் சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் தன்னுடைய 12 சவரன் நகையை காணவில்லை என்று நடிகர் பார்த்திபன் புகார் அளித்துள்ளார். தன்னுடைய அலுவலகத்தில் ஒரு பையில் நகையை வைத்திருந்ததாகவும் அதை காணவில்லை என்று போலீசாரிடம் புகார் அளித்து இருந்தார்.
இதற்கு ஏற்றபடி சைதாப்பேட்டை காவல் துறையினர் பார்த்திபன் அலுவலகம் சென்று CCTV கேமராவை ஆய்வு செய்தனர் அதில் அலுவலகத்தில் வேலை பார்க்க வரும் ஒருவர் மீது சந்தேகமாக இருப்பதாக கூறி கிருஷ்ண காந்த் என்பவரை அழைத்து விசாரித்தனர்.
விசாரணையில் அவர்தான் கைப்பையை எடுத்ததாக கூறி உள்ளார் அவர் மட்டும் தான் அலுவலகத்தில் இருந்ததாகவும் பையை எடுத்து கொடுப்பதற்கு தான் இருப்பதாக கூறினார்.
இது குறித்து பார்த்திபனிடம் தெரிவித்த போது FIR எதுவும் போட வேண்டாம் என்று கூறி கைப்பட எழுதி கொடுத்து கேஸ் போடாமல் அவரை விட்டு விட்டார். போலீசாரம் கேஸ் எதுவும் போடாமல் கிருஷ்ணகாந்த் விடுவித்தனர்.