நாட்டிற்கு எதிராக பல அநியாயங்கள் நாட்டில் நடக்கும் பொழுது திரை நட்சத்திரங்களும் அதற்கு எதிராக குரல் கொடுத்து வருகின்றனர். அப்படி அவர்கள் குரல் கொடுக்கும் போது நீங்கள் யார் இதையெல்லாம் கேட்பதற்கு என்று பல சமூகத்தை எதிர்த்து பேசி வந்தாலும் திரைநட்சத்திரங்கள் எதிர்த்து சொல்லும் பிரச்சனைகளை மிகவும் வைரலாகும் வருகின்றன.
பெண்களைப் போற்றும் தெய்வமாக வழிபடும் இந்தியாவில்தான் அதிக பெண்களுக்கு எதிரான அநீதிகளும் நடந்து வருகின்றன. சுதந்திரம், பெண்ணுரிமை, பெண் சம உரிமை என்று பல பேசப்பட்டாலும் இன்னும் சிறுவயது குழந்தையிலிருந்து வயதான மூதாட்டி வரை வெளியில் தைரியமாக நடந்து போக முடியவில்லை என்பதுதான் நாம் அனைவரும் ஒப்புக் கொள்ள வேண்டிய உண்மை.
சமீபத்தில் சிறுமி கற்பழிப்பு வழக்காக ஜெயப்பிரியா வழக்கு மிகவும் தமிழக மக்களின் நெஞ்சை உலுக்கியுள்ளது. இந்த செய்தி பலரையும் அதிர்ச்சி அடைய உன் மன அழுத்தத்திற்கு ஆளாகி உள்ளது. இதுகுறித்து பிக் பாஸ் சீசன் 3 இல் கலந்துகொண்ட கவின் இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவிட்டுள்ளார். அதில்
‘இன்னும் எத்தனை ஹேஷ்டேக் போடணும்.. இன்னும் எத்தனை நியாயம் கேட்க வேண்டும். இன்னும் எவ்வளவோ போராடணும்.. அந்த குழந்தை மாஸ்க் போட்டு சிரித்து விட்டு இருக்கு ஒரு போட்டோ இல்ல.. இன்னொரு போட்டோவை பார்க்க கூட முடியல.. நல்லா இருப்பிங்களா .. நீங்க எல்லாம் ஒரு குழந்தையை கற்பழித்து கொல்றது அதைவிட பெரிய தப்பு என்ன இருக்க முடியும்.. பொண்ண பெத்தவ எல்லாம் பயப்படுற மாதிரி இந்த தப்பெல்லாம் செஞ்சவனும் பயப்படனும் தானே அதுக்காக ஒரு சட்டம் பிறக்கக் கூடாதா.. இந்தக் கருத்திற்கு அவர்களது கருத்தையும் கூறி வருகின்றனர்.