கனா காணும் காலங்கள் கல்லூரியின் சாலை என்ற சீரியல் மூலம் விஜய் டிவியில் அறிமுகமானவர் கவின். சீரியலுக்கு பிறகு சரவணன் மீனாட்சி சீசன் 3 இல் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். அதன் பிறகு வெள்ளித்திரையில் வாய்ப்பு வரவே சீரியல் இருந்து விலகி கதாநாயகனாக நடித்தார்.
இந்த படம் இவருக்கு வெளி வரத் தாமதமானதால் பிக் பாஸ் சீசன் 3 இல் கலந்து கொண்டார். பிக் பாஸ் சீசன் 3ல் மிகவும் பிரபலமான பிரபல நடிகர்களில் முக்கியமானவர். இவருக்கு தனி ஆர்மி ஒன்றும் அந்த சீசனில் உருவானது இவருக்கும் லாஸ்லியாவிற்கும் இடையே ஆன காதல் கடைசி வரை புரியாத புதிராகவே முடிந்தது. இந்நிலையில் தற்போது லிஃப்ட் என்ற படத்தில் நடித்து வருகிறார்.
கவின் ஏற்கனவே நடிகர் விஜய் சேதுபதி நடித்த பீட்சா திரைப்படத்தில் ஒரு காட்சியில் தோன்றியுள்ளார். தற்போது இது குறித்த புகைப்படங்கள் இணையத்தில் உலா வருகின்றன. இதோ இந்த புகைப்படம்.