தமிழில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர் கவின். இவர் விஜய் தொலைக்காட்சியில் கனாகாணும் காலங்கள் கல்லூரி கதை என்ற சீரியல் மூலம் அறிமுகம் ஆனார். அதன் பிறகு புகழ் பெற்ற சரவணன் மீனாட்சி என்ற சீரியல் நடித்தார்.
இந்த சீரியலில் வேட்டையன் என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றார். இவருக்கு இந்த சீரியல் மூலம் நல்ல வரவேற்பு கிடைத்தது. அதன் பிறகு தொகுப்பாளராக பணியாற்றிய பிறகு சினிமா வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அவர் நடித்த முதல் படம் வெளிவர தாமதமானதால் பிக்பாஸ் சீசன் 3 கலந்து கொண்டார்.
இந்த சீசனில் அதிக ரசிகர்களை பெற்றவர் இவர் தான், தற்போது ஊரடனு உத்தரவின் காரணமாக வீட்டில் இருக்கும் அவர் ஒரு ஆங்கில படமான (Miracle cell no .7 ) என்ற படத்தை பார்த்து இடைவிடாது அழுதுகொண்டிருப்பதாக கூறியுள்ளார்.