Wednesday, July 17, 2024
-- Advertisement--

நட்புக்காக மேடையிலேயே அழுத கவின் ..!! காரணம் இதுதான் ..!!

சின்னத்திரையில் மிக பிரபலமான நடிகராக வலம் வந்த கவின், பிக் பாஸ் சீசன் 3 ல் போட்டியாளராக பங்கு பெற்றார். இந்த போட்டியில் இவருக்கு என்று ஒரு தனி ஆர்மியே தொடங்கப்பட்டு தமிழ்நாட்டில் இவருக்கு என தனி ரசிகர் மன்றமே தொடங்கும் அளவிற்கு பெரிய ஆளாக உயர்ந்தார்.

கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்ட கவின் அடுத்தடுத்து சிறந்த கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்க தொடங்கினார். அந்த வரிசையில் கடந்த ஆண்டு இவர் நடிப்பில் வெளியான லிஃப்ட் படம் நல்லதொரு வரவேற்பு பெற்றது.

அதனைத் தொடர்ந்து தற்போது டாடா என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படமும் தியேட்டரில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது தொடர்ந்து அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கவினுக்கு வந்து கொண்டிருக்கிறது.

   டாடா படத்தைப் பற்றி ஒரு மேடையில் பேசும்பொழுது கவின் இந்த படத்திற்காக நான் 12 வருடம் கஷ்டப்பட்டு இருக்கிறேன்.  இந்த படத்தின் வெற்றியை என் உயிர் நண்பன் மணிகண்டனுக்கு நான் சமர்ப்பிக்கிறேன்.  என் உயிர் நண்பன் தற்பொழுது உயிரோடு இல்லை என்றாலும் இங்கு ஏதாவது ஒரு மூலையில் அவன் இருப்பான் என நம்புகிறேன்.  

என்னுடைய ஒவ்வொரு வெற்றிக்கு பின்னாலும் அவன் உள்ளான் தியேட்டரில் என் படத்தை பார்த்து விசில் அடித்த என் நண்பன் தற்போது என்னுடன் இல்லை என்பது  மிகவும் வருத்தம் அளிக்கிறது என்று பேசிய போதே கண்கலங்கினார் கவின்.

பிக் பாஸ் சீசன் 3 யில் கலந்து கொள்ளும்போதும் நட்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்த போட்டியாளர் கவின். அடுத்தடுத்து இவர் வெற்றிகளை பார்க்க ரசிகர்கள் ஆர்வமாக இருப்பதாகவும் கவலைப்படாதீர்கள் நண்பா உங்களுக்கு நண்பனாக நாங்கள் இருக்கிறோம் என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles