தளபதி விஜய் பிறந்தநாளையொட்டி விஜய் குறித்த ஹேஷ்டாக்குகள் மிகவும் இணையத்தில் வருகின்றன. அஜித் ரசிகர்கள் விஜய் பிறந்த நாளுக்கு ஒரு புதிய ஹேஷ் டேகை உருவாக்கி அந்த ஹேஷ்டேகும் வைரல் ஆகி வருகின்றது. இந்நிலையில் நடிகர் விஜய்யின் பிறந்தநாளான இன்று மிகவும் கொண்டாட்டமாக ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
விஜய் மற்றும் அஜீத்துக்கு இணையான பிரபலமாகும் வகையில் மற்றுமொரு ஹேஷ்டேக்கும் இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது. அது பிக் பாஸ் சீசன் 3 இல் கலந்துகொண்ட நடிகர் கவின். இன்று பிறந்தநாள் என்பதால் அவரது ரசிகர்கள் அவர் பெயர் குறிப்பிட்ட ஹேஷ்டேக்கை மிகவும் வைரலாகி வருகின்றனர். இதனால் அஜீத் மற்றும் விஜய் ரசிகர்கள் மிகவும் குழப்பத்தில் உள்ளனர். இவருக்கு எப்படி இவ்வளவு மாஸ் கிடைத்தது என்று.
ஓரிரு படங்களில் நடித்த கவின் பிக் பாஸ் சீசன் 3ல் கலந்து கொண்டு மிகப் பெரிய அளவில் பிரபலம் அடைந்தார். இவருக்கு இந்த சீசனில் இருந்து வெளியேறிய பிறகு இன்னும் ஒரு படம் கூட நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.