தமிழில் பருத்திவீரன் என்ற வெற்றி படம் மூலம் அறிமுகம் ஆனவர் கார்த்தி. இவர் தந்தை பிரபல நடிகர் சிவகுமார். இவர் அண்ணன் தமிழில் முன்னணி நடிகர் சூர்யா என்பது அனைவர்க்கும் தெரிந்ததே. பருத்திவீரன் படத்தில் நடித்த பிறகு இவருக்கு தமிழ் பட வாய்ப்புகள் நிறைய வர ஆரம்பித்தன.
இவர் தன் அண்னன் போலவே காதல் திருமணம் தான் செய்து கொள்வர் என அனைவரும் நினைத்திருந்த சமயத்தில் இவர் ரஞ்சனி என்ற பெண்ணை திருமணம் செய்துகொண்டார்.
அதன் பிறகு இவர்கள் பெரும்பாலும் சேர்ந்து இருக்கும் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வருவதில்லை. இந்த கார்த்தி-ரஞ்சனி தம்பதியருக்கு உமையாள் என்ற மகள் உள்ளார்.
தற்போது இந்த ஜோடியின் மகள் உமையாள் புகைப்படம் ஒன்று வைரலாகி உள்ளது. இதோ அந்த புகைப்படம்.

