நடிப்பின் இமயம் நடிப்பிற்கு எல்லாம் சிகரம் என்று சொல்லும் அளவிற்கு கமலஹாசனின் நடிப்பு இருக்கும். சிறுவயதிலிருந்தே நடிக்கத் தொடங்கிய இவர் தற்போது வரை நடித்து வருகிறார். 60 வருடங்களுக்கு மேல் சினிமாவில் நீடித்து இருக்கும் பெருமை உடையவர் கமலஹாசன்.

தற்போதுள்ள முன்னணி நடிகர்களுக்கு எல்லாம் ஒரு இன்ஸ்பிரேஷனாக திகழ்ந்து வரும் கமலஹாசன் படங்களில் கதைக்கு கதை வித்தியாசம் காட்டி அசத்தியுள்ளார்.ஒரு படத்திற்காக தன் உடலை எவ்வளவு வேண்டுமானாலும் கஷ்டப்படுத்தி கொள்வார் கமலஹாசன்.

பல படங்களில் இரட்டைவேடம் மாறுவேடம் சில படங்களில் மூன்று கமலஹாசன் மற்றும் தசாவதாரத்தில் பத்து கமலஹாசன் நடிப்பின் பிரம்மாண்டமாக திகழ்ந்து வருகிறார். இவரை மக்கள் உலக நாயகன் என்று பெருமையோடு அழைப்பர். நம் நாட்டிற்கு கிடைத்த அரிய பொக்கிஷம் கமலஹாசன் என்றும் சிலர் கூறுவர்.
இந்நிலையில் இவர் தன் சிறு வயதிலேயே அதாவது எட்டு வயதிலேயே ஒரு படத்தில் இரட்டை வேடமிட்டு நடித்துள்ளார். இதோ அந்த வீடியோ.