பிக்பாஸ் சீசன் 1 விஜய் தொலைக்காட்சியில் ஆரம்பித்த போது அதில் 16 போட்டியாளர்கள் பங்கேற்றனர். அதில் ஒருவர் நடிகர் கணேஷ். இவர் சில சினிமா படங்களில் துணை கதாநாயகனாக நடித்துள்ளார். இவர் பெரும்பாலும் போலீஸ் வேடங்களில் தான் நடித்துள்ளார்.
இவர் இந்த சீசனில் மிகவும் பொறுப்பானவராகவும், தன் கடமையை சரியாக செய்பவராகவும் நடந்து கொள்வார். இவருடைய நற்குணம் பெரும்பாலான மக்களை ஈர்த்தது. இவர் சீரியல் நடிகை நிஷாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இந்த ஜோடிக்கு பெண் குழந்தை உள்ளது. தற்போது தான் தவழும் இக்குழந்தையுடன் பாலிவுட் பாட்டு ஒன்றிற்கு ஸ்லோ மோஷனில் நடனம் ஆடும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ பார்ப்போர் கண்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது.