Saturday, January 25, 2025
-- Advertisement--

நயன்தாரா மீது ஏற்கனவே செம டென்ஷனில் இருந்த தனுஷ்…!!! நயன் உங்க நடிப்பு சரி இல்ல ஓப்பனாக சொன்ன தனுஷ்..!!!

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தனுஷ் பற்றி வெளியிட்ட அறிக்கை தான் காலை முதல் பரபரப்பாக இன்று பேசப்படும் விஷயமாக உள்ளது. நயன்தாரா தனது திருமணத்தை வீடியோ எடுத்து ஒளிபரப்பு செய்ய ஒரு பெரும் தொகையை வாங்கி கொண்டு netflix நிறுவனத்திற்கு கொடுத்திருந்தார். திருமணமாகி இரு மகன்கள் பிறந்த பின்னும் நயன்தாராவின் அந்த வீடியோ வெளியாகாமல் இருந்தது. நயன்தாராவின் திருமண வீடியோ வெளியாகாமல் இப்படி கிடப்பில் கிடப்பதற்கு காரணம் தனுஷ் என்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார்கள் சீனி வட்டாரத்தினர்.

விக்னேஷிவனுக்கு வாய்ப்பு கொடுத்த தனுஷ்:

நயன்தாராவின் கணவர் விக்னேஷ் சிவன் தனுசுக்கு அவரது மனைவி ஐஸ்வர்யா மூலம் பழக்கம் முதலில் ஐஸ்வர்யாவிற்கு வை ராஜா வை என்ற படத்திற்கான போஸ்டர் டிசைன்களை செய்து கொடுத்த விக்னேஷ் சிவனை தனுசுக்கு அறிமுகப்படுத்திவிட்டது ஐஸ்வர்யா தான். தனுஷும் ஒரு வாய்ப்பு கொடுப்போமே என்று விக்னேஷ் சிவனுக்கு வேலையில்லா பட்டதாரி படத்தின் போஸ்டர் டிசைன்களை செய்யும் வேலையை அவரிடம் ஒப்படைத்தாராம். விக்னேஷ் சிவனின் வேலை பிடித்து போக அதே படத்தில் விக்னேஷ் சிவனுக்கு நடிப்பதற்கும் வாய்ப்பு கொடுத்தாராம் தனுஷ். VIP கொடுத்த மாபெரும் வெற்றி தனுசை குஷிப்படுத்தியது தனுஷ் விக்னேஷ் உனக்கு ஏதாவது நான் செய்ய வேண்டும் என்ன செய்ய வேண்டும் என்று கேட்டிருக்கிறார். அதற்கு விக்னேஷ் சிவன் என்னிடம் ஒரு கதை இருக்கு சார் அத நீங்க தயாரித்தால் நான் படம் பண்ணிடுவேன்னு கூறியிருக்கிறார். தனுஷ் உடனே இந்த கதையை நயன்தாராவிடம் சொல்லுங்கள் என்று கூற அதன் பின் உருவானது தான் நானும் ரவுடிதான் திரைப்படம்.

நொந்து போன தனுஷ் காரணம் இது தான்…!!!

நானும் ரவுடிதான் திரைப்படத்திற்கு ஒரு குறிப்பிட்ட பட்ஜெட் ஒதுக்கி அதற்குள் இந்த படத்தை முடித்து விடுங்கள் என்று விக்னேஷ் சிவனிடம் கூற அதற்கு விக்னேஷ் சிவன் ஒப்புக்கொண்டு படத்தை நாளுக்கு நாள் பட்ஜெட்டை எகிற வைத்தது தனுசுக்கு பெரிய தலைவலியை கொடுத்தது. இந்த திரைப்படம் வெளியானாலும் பெரிய லாபம் கிடையாது என்று நன்கு அறிந்த தனுஷ் வேறு வழியில்லாமல் அந்த திரைப்படத்தை வெளியிட்டார். திரைப்படமும் சுமாராக ஓடியது. இந்த திரைப்படத்தின் போது தான் நயன்தாராவுக்கும் விக்னேஷ் இருவருக்கும் காதல் ஆரம்பமானது. தனுஷ் காசுல அவங்க ரொமான்ஸ் பண்றாங்க என்ற செய்தி அரசல் புரசலாக தனுஷ் காதுக்கு போக இந்த படத்தை முடித்தால் போதும் என்று முடித்தும் ரிலீஸ் செய்து விட்டாராம்.

அது மட்டுமல்ல நானும் ரவுடி தான் படத்தில் நயன்தாராவின் நடிப்பு சரியில்லை என்பதை தனுஷ் நேரடியாகவே நயன்தாராவிடம் கூறிவிட்டாராம். அதுவே நயன்தாராவிற்கு பெரிய வருத்தம் தானம்.

நயன்தாரா மாஸ்டர் பிளான்..?

இது ஒருபுறமும் இருக்க netflixல் 18 நவம்பர் 2024 அன்று நயன்தாராவின் Nayanthara: Beyond the Fairy Tale வெளியாக இருக்கையில் இன்று வரை எந்த ஒரு பரபரப்பு பப்ளிசிட்டி இல்லையே என்று நினைத்திருந்த நயன்தாரா பப்ளிசிட்டிக்காகவே இன்று தனுஷை பற்றி இப்படி ஒரு செய்திகளை பரப்பி விட்டு விளம்பரம் தேட முயற்சிக்கிறார் என்று செய்திகளும் சினி வட்டாரத்தில் கூறப்படுகிறது.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles