தமிழ் சினிமாவில் ‘அன்பு’ என்ற படத்தில் மூலம் அறிமுகமானார் பாலா. நடிகர் பாலா காதல் கிசுகிசு, அம்மா அப்பா செல்லம், வீரம், அண்ணாத்த உட்பட பல படங்களில் நடித்துள்ளார். இவர் சிறுத்தை சிவாவின் சகோதரர் ஆவார்.
நடிகர் பாலா 15 வருடங்களுக்கு முன்பு மலையாள திரைப்படத்தின் மூலம் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்தார். அவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீரென உடல் நல குறைவு ஏற்பட்டது.
அதனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் கடுமையான வயிறு வலி ஏற்பட்டு. கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு கல்லீரலில் பிரச்சனை இருப்பதாக மருத்துவர்கள் அறிவித்தனர். தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள பாலா தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.