மலையாள நடிகர்களில் முன்னணி நடிகர் பகத் பாஸில். இவர் மலையாள சினிமாவில் பல படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் தமிழில் சிவகார்த்திகேயன் நடித்த வேலைக்காரன் படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் மக்களிடையே நல்லதொரு வரவேற்பை பெற்றார்.

தமிழில் உச்ச நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர் நஸ்ரியா, நயன்தாராவிற்கு பிறகு இவர் தான் பலரின் கனவு கன்னியாக இருந்தார். சினிமாவில் உச்சத்தில் இருக்கும் போதே இவர் திருமணம் செய்து கொண்டார்.
இவர் நடிகர் பகத் பாசிலை காதலித்து திருமணம் செய்து கொண்டு குடும்பம் வாழ்க்கை என செட்டில் ஆகிவிட்டார். இந்நிலையில் பகத் பாசில் காதல் திருமணம் குறித்து முதல்முறையாக பேசியுள்ளார்.

பெங்களூர் டேஸ் என்ற படத்தில்தான் முதன் முதலில் நஸ்ரியாவை சந்தித்தேன். முதல் சந்திப்பிலேயே எனக்கு அவர் மீது ஒரு ஈர்ப்பு வந்தது. இந்த ஈர்ப்புக்கு காரணம், என்னை யார் பார்த்தாலும் முதலில் ஜால்ரா தட்டுவார்கள், ஆனால் இவர் என்னிடம் மிகவும் எதார்த்தமாக நடந்து கொண்டா. ர் முதலில் நட்பாக ஆரம்பித்த எங்கள் சந்திப்பு பிறகு காதலாக மாறியது, என்னுடைய காதலை நான் அவரிடம் சொல்லலாமா வேண்டாமா என்று குழம்பிப் போயிருந்தேன், அதன்பின் ஒருநாள்நஸ்ரியாவே வந்து என்னிடம் வெளியே செல்லலாமா என்று கேட்டு என்னை சிலிர்க்க வைத்தார். பின் இருவரது பெற்றோரும் எங்கள் திருமணத்திற்கு பச்சைக்கொடி காட்ட நாங்கள் திருமணம் செய்து கொண்டோம்.