Monday, September 9, 2024
-- Advertisement--

கும்கி அஸ்வினுக்கு எளிமையான முறையில் திருமணம் முடிந்தது..!! அரசு விதிகளின்படி திருமணம் நடைபெற்றது..!!

நடிகர் திலகம் சிவாஜிகணேசனின் பேரனும், பிரபுவின் மகனுமான விக்ரம் பிரபு தமிழ் சினிமாவில் அறிமுகமான படம் கும்கி. இந்த படத்தை இயக்குனர் பிரபுசாலமன் இயக்கி இருந்தார். இந்த படத்தில் தம்பி ராமையாவுடன் கூட்டணி சேர்ந்து நகைச்சுவையில் கலக்கிய நடிகர் அஸ்வின். இவர் இதற்கு முன்பு பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தில் ராஜேந்திரனுக்கு மகனாக நடித்து இருப்பார். கும்கி படத்தின் மூலம் இவர் மிகவும் பிரபலமடைந்தது இவர் கும்கி அஸ்வின் என்று தற்போது அழைக்கப்படுகிறார்.

இந்தப் படத்தை தொடர்ந்து இவர் பல திரைப்படங்களில் நகைச்சுவை நாயகனாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இந்நிலையில் ஊரடங்கு காரணமாக படப்பிடிப்பு இன்றி இருக்கும் அஸ்வின் தனது நீண்ட நாள் காதலியான மருத்துவர் திவ்யாவை கரம் பிடித்து உள்ளார். இருவரின் காதலுக்கு பெற்றோர் சம்மதம் தெரிவித்ததால் இவர்கள் திருமணம் அவரது வீட்டில் எளிமையான முறையில் இருவரின் வீட்டார் குடும்பத்தினருடன் இருபது நபர்களின் முன்னிலையில் அரசு விதிகளின்படி நடைபெற்றது.

இவரது திருமணத்திற்கு நேரில் செல்ல முடியாததால் பல பிரபலங்கள் சமூக வலைத்தளங்களிலும் செல்போன் அழைப்பு மூலமும் இவருக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles