தமிழில் ஜெயம் ரவி நடித்த வனமகன் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் சாயிஷா. இவருக்கு முதல் படம் போலவே இல்லாமல் நல்ல முதிர்ந்த நடிப்பில் ரசிகர்களை கவர்ந்தார். அதன் பிறகு இவருக்கு பல நடிக்கும் பல படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் இவரும் ஒருவராக இருப்பார் என பலரும் நினைத்தனர்.
அதன்பிறகு இவர் சூர்யா, கார்த்தி போன்ற முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்த ஆர்யா நடித்த ரஜினிகாந்த் படத்தில் நடித்ததன் மூலம் ஆர்யாவுக்கும் காதல் மலர்ந்தது. இருவரும் பெற்றோரின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர்.
திருமணத்திற்கு பிறகு சயீஷாவிற்கு சொல்லிக்கொள்ளும் அளவிற்கு படவாய்ப்புகள் இல்லை. இருப்பினும் தொடர்ந்து பட வாய்ப்பிற்காக பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில் ஆர்யாவின் மனைவி சாய்ஷா தற்போது கர்ப்பமாக உள்ளதாக செய்திகள் வெளிவந்தது. ஆனால் இதுகுறித்து ஆர்யா, சாயிஷா தரப்பிலிருந்து எந்த விளக்கமும் வரவில்லை.