மிகவும் இளம் வயதிலேயே இசை அமைப்பாளராக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் ஜிவி பிரகாஷ். இவர் தனது இசையால் ரசிகர்கள் மனதை கொள்ளை அடித்தார். அவரது இசை அனைவருக்கும் பிடித்தமாக இருந்தால் நிறைய தமிழ்ப் படங்கள் கிடைத்தன.
ஜிவி பிரகாஷ் தன் சிறுவயது தோழியான பாடகி சைந்தவியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். சைந்தவி நிறைய தமிழ் படங்களில் பாடகியாக பாடியுள்ளார். திருமணத்திற்கு பிறகும் சைந்தவி தொடர்ந்து படங்களில் பாடி வருகிறார். இந்நிலையில் ஜிவி பிரகாஷின் இசையமைப்பாளர் மற்றும் ஹீரோவாகவும் தமிழ் சினிமாவில் வலம் வருகிறார்.
இவர் தமிழில் பென்சில் என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். அதன்பிறகு திரிஷா இல்லனா நயன்தாரா, ஒரு குப்பத்து ராஜா போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.இசை நடிப்பு என இரண்டிலும் கவனம் செலுத்திவரும் ஜிவி பிரகாஷ் சமீபத்தில் நடித்து வெளிவந்த படம் சிவப்பு மஞ்சள் பச்சை.
இந்நிலையில் ஜிவி பிரகாஷ் மற்றும் சைந்தவி தம்பதிக்கு அழகிய பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. இந்த குழந்தையின் பெயர் என்னவென்று அனைவரும் எதிர்பார்த்திருந்த நிலையில் தான், பிக்பாஸில் பங்குபெற்ற கணேஷ் இன்ஸ்டாகிராமில் சைந்தவியின் குழந்தையை பார்க்க ஆவலாக உள்ளேன் என்று பதிவிட்டுள்ளார். மேலும் அதில் குழந்தையின் “அன்வி “பெயர் எனவும் பதிவிட்டுள்ளார்.