கொரானோ தொற்று இருக்கிறதா என்று சந்தேகப்படும் நபர்கள் தனிமைப்படுத்துவது தற்போது வழக்கமான ஒன்று. அதுபோல சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த பேட்ட படத்தில் வில்லனாக நடித்தவர் நவாசுதீன் சித்திக்.
இவர் பல இந்தி படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் இவர் மறைந்த சிவசேனா தலைவர் பால்தாக்கரே வாழ்க்கை கதையை மையமாக வைத்து உருவான படத்தில் நடித்ததன் மூலம் தேசிய விருதும் பெற்றார்.
அண்மையில் நவாசுதீன் சித்திக் ரம்ஜான் பண்டிகையை கொண்டாட மும்பையிலிருந்து உத்தரபிரதேசத்தில் உள்ள தனது சொந்த கிராமத்திற்கு வந்துள்ளார். இதனால் மும்பை அரசு அலுவலகத்தில் அனுமதி சீட்டு பெற்றுள்ளார்.
அவருக்கு கொரானோ இருக்குமா என்று பரிசோதனை செய்தனர் பரிசோதனையில் கொரானோ இல்லை என்பது உறுதியானது. மேலும் அவரது குடும்பத்தினருக்கும் பரிசோதனை நடந்தது. இந்நிலையில் நவாசுதீன் சித்திக்கி வீட்டிலேயே 14 நாட்கள் அதிகாரிகள் தனிமைப்படுத்தி உள்ளனர்.