உலகையே அச்சுறுத்தி வரும் கொரானோ தற்போது இந்தியாவிலும் அதன் கோரத்தாண்டவத்தை தொடர்ந்து வருகிறது. நாளுக்கு நாள் கொரானாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகம் ஆகி கொண்டே வருகிறது.
இதனால் ஊரடங்கு உத்தரவை அரசும் நீடித்து கொண்டே வருகிறது. மேலும் இந்த ஊரடங்கு நாட்டில் செயல் பட்டு வருவதால் அன்றாடம் வருமானத்தை வைத்து வாழும் பல ஆயிரக்கணக்கானோரின் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது.
இதற்காக அரசும், தன்னார்வலரும் தேடி தேடி உதவி செய்து வருகின்றனர். இருப்பினும் இந்த உதவி முழுவதும் அவர்களை சென்று அடைகிறது என்பது கேள்விக்குறியாகத்தான் உள்ளது.
இந்நிலையில் ரஜினி,கமல், அமிதாப்பச்சன், ஷாருக்கான்,சல்மான்கான் போன்றோர் பல கோடி கணக்கில் உதவி செய்து வருகின்றனர். இந்நிலையில் நடிகர் அமீர்கான் ஒரு கிலோ கோதுமை பாக்கெட் மற்றும் தருவதாக தகவல் தெரிவித்ததை அடுத்து இதை வாங்க பலரும் முன் வரவில்லை.
இதற்கு கூட வலி இல்லாதோர் தான் அதனை வாங்கி சென்றனர். இந்நிலையில் அதை வாங்கி சென்றவர்களுக்கு பெரும் அதிர்ச்சி காத்து இருந்தது. இந்நிலையில் ஒவ்வொரு கோதுமை பாக்கெட்டிலும் ரூ.15000 பணம் வைத்துள்ளார். உண்மையாக வறுமையில் வாடுபவர்களுக்கு இப்பணம் சென்றடையவேண்டும் என்ற நோக்கில் இவ்வாறு செய்ததாக அவர் தரப்பு கூறுகிறது.