அஜித் சினிமா பயணத்தின் முக்கிய திருப்பத்தை ஏற்படுத்திய படம் வாலி. இப்படத்தில் அஜித், சிம்ரன், ஜோதிகா ஆகியோர் நடித்து இருப்பர். இந்த படத்தில் அஜித் இரட்டை வேடம். மேலும் இப்படத்தில் அஜித் முதல் முறையாக வில்லனாக நடித்து இருப்பார். இன்றளவும் அஜித் எத்தனை வெற்றி படங்கள் நடித்தாலும் வாலி படம் அவரது வெற்றி பட லிஸ்டில் இருக்கும்.

இந்நிலையில் அந்த பட காலத்தில் பிரபல தயாரிப்பாளரும் அஜித்தும் நெருங்கிய நண்பர்கள். அவர் தயாரிப்பில் அதிக படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் அஜித்திற்காக ஒரு காதல் கதையை உருவாக்கி அதை அஜித்திடம் சொல்ல வந்தார் எஸ்.ஜே.சூர்யா. ஆனால் தாயாரிப்பாளரோ எனக்கு வித்தியாசமான கதை வேண்டும், அதிலும் அஜித் வில்லனாக இருக்கும் வேடமும் வேண்டும் என்று கூற, அஜித்தை வில்லனாக மாற்றி கதை எழுதுவதில் முதலில் தயங்கிய எஸ்.ஜே.சூர்யா அதன் பிறகு எழுதி எடுத்து வந்த கதை தான் வாலி.

கதையை கேட்டு அஜித்தும் தயாரிப்பாளரும் அஜித்தும் மிரண்டு போனார்கள். ஆனால் இன்று வரை அஜித்துக்காக எழுதிய காதல் கதையை சினிமா ஆக்கவில்லையாம் எஸ்.ஜே.சூர்யா.