Friday, December 6, 2024
-- Advertisement--

நடிகர் அஜித் குமார் தந்தை பி.சுப்பிரமணியம் காலமானார்…!!! சோகத்தில் திரையுலகினர்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். நடிகர் அஜித்குமாரின் தந்தை பி.சுப்பிரமணியம் இன்று அதிகாலை காலமானார். உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார்.

அஜித் தந்தை இறப்பு செய்தி ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. நடிகர் அஜித்திற்கு சமூக வலைத்தளங்கள் வாயிலாக ரசிகர்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

நடிகர் அஜித்தின் தந்தை பி.சுப்பிரமணியம் கடந்த நான்கு ஆண்டுகளாக பக்கவாதம் நோய் பாதிப்பால் அவதிப்பட்டு வந்தார். அதற்கு சிகிச்சையும் அளிக்கப்பட்டு வந்தது. இவருக்கு மோகினி என்ற மனைவியும், மூன்று மகன்களும் உள்ளனர்.

அதில் அனில் குமார், அனுப் குமார் மற்றும் அஜித்குமார் என மூன்று மகன்கள் உள்ளனர். தந்தையின் மரணத்தால் சோகத்தில் இருக்கும் அஜித்திற்கு ரசிகர்கள் ஆறுதல் கூறி வருகின்றனர். அஜித்தின் தந்தை பி.சுப்பிரமணியம் உடல் இன்று காலை 10 மணி அளவில் உடல் தகனம் செய்யப்பட உள்ளது.

சென்னை பெசன்ட் நகரில் உள்ள மின் மயானத்தில் தகனம் செய்ய ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. இந்த இறுதி சடங்கில் உறவினர்கள் மட்டுமே கலந்து கொள்ள உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றனர்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles