தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்கள் ஒருவர் அஜித். முன்னணி நடிகர் மட்டுமல்லாது பல திறமைகளை உடையவர். கார் ரேஸ், பைக் ரேஸர், சமையல் கலைஞர், புகைப்பட கலைஞர் என பன்முகத் திறமை உடையவர். இவர் சென்னை தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள வான்வெளி ஆராய்ச்சி மையமான திஷா குழுவின் ஆலோசகராக கடந்த 2018 ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டார்.
மேலும் இக்குழுவினர் உருவாக்கிய ஆளில்லா விமானங்கள் அதிக நேரம் பறந்து சாதனை படைத்துள்ளன. தமிழகத்தில் அதிகரித்து வரும் குரானா வைரஸை கட்டுப்படுத்த பல முயற்சிகள் அரசுகளால் ஏற்பட்டு வருகின்றன. அதுபோலதான் தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் கிருமிநாசினி ட்ரோன் மூலம் பணிகள் மேற்கொண்டு வருகிறது.
இந்த ஆலோசனையை நடிகர் அஜித் தான் வழங்கியதாக தற்போது தகவல்கள் வெளிவந்துள்ளது. மேலும் ஒரு நடிகர் என்பதை தாண்டி சமூக சேவையிலும் இவர் சத்தமில்லாமல் ஈடுபட்டு வருவதால் ரசிகர்கள் இவரை பாராட்டி வருகின்றனர்.