தற்போது நாடெங்கும் கொரானோ வைரஸ் பரவாமல் இருக்க மக்கள் அவர் அவர் வீட்டில் தனிமையில் இருப்பது தான் இந்நோய் பிடியில் இருந்து தப்பிக்க ஒரே வழி என்று கருதி இந்திய அரசு ஊரடங்கு உத்தரவை அளித்துள்ளது.
இதனால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி உள்ளனர். மாத வருமானம் உள்ளவர்களுக்கே இந்த ஊரடங்கு உத்தரவு பெரும் சவாலாக உள்ளது. இந்நிலையில் அன்றாடம் பிழைப்போரின் வாழ்க்கை தற்போது கேள்வி குறியாக உள்ளது. இந்நிலையில் பிரபலங்கள் பலரும் தங்களால் முடிந்த உதவியை ஏழை எளிய மக்களுக்கு செய்து வருகின்றனர்.
அதுபோல தற்போது தமிழில் முன்னணி நடிகராக வலம் வரும் அஜித்தும் மத்திய மாநில அரசிற்கு உதவி தொகை அளித்துள்ளார். மேலும் பெப்சி தொழிலார்களுக்கும் உதவி தொகை அளித்துள்ளார். மொத்தம் இவர் அளித்த உதவி தொகை ரூ.1 .25 கோடி என செய்திகள் வெளிவந்துள்ளது. பலரும் இந்த உதவி தொகை அளித்ததிற்கு நன்றி கூறி வருகின்றனர்.