நாடெங்கும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் கடந்த மூன்று மாதங்களுக்கு மேல் தியேட்டர்கள் உள்ளிட்ட பல பொழுதுபோக்கு இடங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால் பல படங்கள் தயாராகி வெளிவர மிகவும் தாமதமாகி வருகின்றது.
இந்நிலையில் சில படங்கள் OTT தளத்தில் வெளிவருகின்றன. ஜோதிகாவின் பொன்மகள் வந்தாள், கீர்த்தி சுரேஷ் நடித்த பென்குயின் போன்ற படங்கள் தற்போது OTT ல் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்றன. இதனை தொடர்ந்து லாக்கப், டேனி போன்ற திரைப்படங்கள் வெளிவர உள்ளன.
அது போல தமிழில் முன்னணி நடிகர்களில் ஒருவரான ஆர்யா நடித்து உருவான படம் OTT வெளியாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருகின்றது. இந்த படத்தை இயக்குனர் சக்தி சௌந்தர்ராஜன் இயக்கியுள்ளார். ஆர்யாவுடன் இணைந்து ஆர்யா மனைவி சாயீஷா நடித்துள்ளார். இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளிவரும் என்று நம்பப்படுகின்றது.