தமிழ் சினிமாவில் கவனிக்கத்தக்க நடிகர்களில் ஒருவர் ஆதி. மிருகம் என்ற வித்தியாசமான படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இந்த படத்திற்கு பிறகு தொடர்ந்து நல்ல கதையம்சம் உள்ள படங்கள் தமிழ் சினிமாவில் வர ஆரம்பித்தன. ஈரம், அரவான், அய்யனார், மரகதநாணயம் உள்ளிட்ட பல தமிழ் படங்களில் இவர் நடித்துள்ளார்.
இவர் நடித்த ஒவ்வொரு படங்களும் மக்கள் மனதில் நன்கு இடம்பெற்றுள்ளன. இந்நிலையில் இவர் தமிழ் மொழி மட்டுமின்றி தெலுங்கு சினிமாவிலும் கவனம் செலுத்தி வருகிறார். தற்போது ஊரடங்கு காரணமாக வீட்டிலிருக்கும் நடிகர் ஆதி சமூக சேவையிலும் ஈடுபட்டு வருகிறார். சமீபத்தில் லெட்ஸ் த பிரிட்ஜ் என்ற அமைப்பின் மூலம் இணைந்து சென்னை முழுக்க கொரனோ நிதி அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தன் தந்தைக்கு முடிவெட்டி உள்ள இவர் அதற்கான பணத்தை தன் அப்பாவிடம் வாங்கும்பொழுது பேரம் பேசி வாங்கினார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் மிகவும் வைரலாகி வருகிறது. சிலர் அப்பாவிடமே இப்படி பண்ணலாமா என்று விளையாட்டாக கேள்வி கேட்டு வருகின்றனர்.