தமிழில் ஜெயம் ரவி நடித்த வனமகன் என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் சாயிஷா. இவர் நடித்த முதல் படம் இவருக்கு நல்ல வரவேற்பைப் பெற்றுத் தந்ததால் கோலிவுட்டில் இவருக்கு நிறைய பட வாய்ப்புகள் வந்தன.
தொடர்ந்து பல படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்ட் வருவார் என பல ரசிகர்கள் இவரை எதிர்பார்த்தனர். இந்நிலையில் இவர் கடைக்குட்டிசிங்கம், காப்பான், கஜினிகாந்த் போன்ற ஒரு சில படங்களில் நடித்து அதற்குள் ஆர்யா நடிகருடன் காதல் ஏற்பட்டு திருமணம் செய்து கொண்டார்.
இது பல ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்த போதும் திருமணத்திற்கு பின்பும் தொடர்ந்து படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார். இருப்பினும் இவருக்கு வாய்ப்புகள் குறைவாகவே வந்தவண்ணம் உள்ளன.
ஊரடங்கு காரணமாக வீட்டில் இருக்கும் ஆர்யா மனைவி சாயிஷா அவ்வப்போது நடன வீடியோக்களை வெளியிட்டு அசத்தி வருகிறார் அந்த வகையில் நடுக்கடலில் செந்தில் கணேஷ் ராஜலட்சுமி பாடிய சின்ன மச்சான் பாடலுக்கு நடனமாடி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இதோ அந்த வீடியோ..