Friday, March 29, 2024
-- Advertisement--

மகனின் திருமணத்திற்கு வந்த மொய் பணத்தை முதியோர் காப்பகத்திற்கு கொடுத்த தந்தை…!!! வரதட்சணையும் வேண்டாம் மொய்யும் வேண்டாம்…!!! குவியும் பாராட்டுக்கள்.

மயிலாடுதுறை அருகே ஓய்வுபெற்ற நூலகர் ஒருவர் தன் மகன் திருமணத்திற்கு உறவினர்கள் வைத்த மொய் பணத்தை மாற்றுத்திறனாளி முதியோர்களுக்கு நேரில் சென்று வழங்கியுள்ளார்.

மயிலாடுதுறையை அடுத்த திருவிழுந்துர் தென்னைமரசாலையில் வசிப்பவர் ஜெயக்குமார் இவருக்கு வயது 62 ஓய்வு பெற்ற நூலகர் இவரது மகன் சம்பத்குமார் காந்திமதி என்ற பெண்ணுக்கும் கடந்த ஜூன் 9ஆம் தேதி மயிலாடுதுறையில் திருமணம் நடைபெற்றது.

திருமண அழைப்பிதழில் அன்பளிப்பை தவிர்க்கவும் என்று ஜெயக்குமார் அவர்கள் கேட்டுக்கொண்டிருந்தார் ஆனாலும் அன்பின் அன்பின் காரணமாக உறவினர்கள் மொய் வைத்தார்கள். மறுக்கமுடியாத ஜெயக்குமார் திருமண மண்டபத்திலேயே உண்டியல் ஒன்றை வைத்து மொய் பணத்தை அந்த உண்டியலில் செலுத்தும் படி கேட்டுக்கொண்டார்.

பின்னர் அதில் வசூலான மொய் பணம் ரூபாய் 83 ஆயிரம் மற்றும் தனது பங்கையும் சேர்த்து ஒரு லட்சத்தை மயிலாடுதுறையில் உள்ள மாற்றுத்திறனாளிகள் காப்பகம் முதியோர் காப்பகம் மற்றும் ஏழை முதியவர்களுக்கு ஜெயக்குமார் நேரில் பிரித்துக் கொடுத்து வழங்கினார்.

மகளின் திருமணத்திற்காக பெண் வீட்டாரிடம் வரதட்சணை வாங்காத நூலகர் ஜெயக்குமார் மொய் மூலமாக வந்த தொகையை சமூக சேவை அமைப்புகளுக்கு வழங்கியுள்ளது பலரும் பாராட்டி வருகின்றனர்

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles