இந்திய திரையுலகில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவர் ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர் ரகுமான். தமிழ் மொழி மீது மிகவும் பற்று கொண்டவர் ஏ.ஆர் ரகுமான். அதோடு ஹிந்தி திணிப்புக்கு எதிராக குரல் கொடுத்து வருகிறார். இந்த நிலையில் விருது விழா ஒன்றில் தனது மனைவி சாய்ரா பானுவுடன் கலந்து கொண்டார் ஏ.ஆர் ரகுமான்.
அந்த விழாவில் அவருக்கு சிறந்த இசையமைப்பாளர் என்ற விருது வழங்கப்பட்டது. அப்போது தொகுப்பாளர்கள் ஏ.ஆர் ரகுமானின் மனைவியை பேச சொன்னார்கள். அவர் பேசத் துவங்கிய போது ஹிந்தியில் பேசாதீர்கள் தமிழில் பேசுங்கள் என ஏ ஆர் ரகுமான் மனைவியிடம் அன்பு கட்டளை விடுத்தனர்.
அதற்கு அவர் எனக்கு சரளமாக தமிழ் பேசத் தெரியாது, என்னை மன்னித்து விடுங்கள். அதனால் நான் ஆங்கிலத்தில் பேசுகிறேன் எனக் கூறினார். அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி உள்ளன. இந்த நிலையில் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் நடிகை கஸ்தூரி அவ்வப்போது யாரிடமாவது வம்பு இழுத்துக்கொண்டு இருப்பதே வழக்கமாகக் கொண்டிருக்கிறார்.
அந்த வகையில் என்னது ஏ.ஆர் ரகுமான் அவர்களின் மனைவிக்கு தமிழ் வராதா.? அவங்க தாய் மொழி என்ன? வீட்டில் குடும்பத்தினருடன் எந்த மொழி பேசுவாங்க என கேள்வி எழுப்பி உள்ளார். அதற்கு ஏ.ஆர் ரகுமான் ஒற்றை வரியில் காதலுக்கு மரியாதை என நடிகை கஸ்தூரிக்கு தக்க பதிலடி கொடுத்துள்ளார். அந்த பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
காதலுக்கு மரியாதை🌺😍 https://t.co/8tip3P6Rwx
— A.R.Rahman (@arrahman) April 27, 2023