இந்திய அளவில் மட்டும் அல்லாது தேசிய அளவில் புகழ் பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான். இவர் தமிழ் நாட்டை சேர்ந்தவர் என்ற பெருமை அனைவர்க்கும் உண்டு. இவர் இதுவரை எந்த இந்திய இசையமைப்பாளரும் செய்யாத சாதனை அதாவது ஆஸ்கர் விருது வாங்கியுள்ளார்.
இவர் பாடல்களுக்கும் இவர் இசைக்கும் நிறைய ரசிகர்கள் உலகெங்கும் உள்ளனர். இந்நிலையில் இவரது பாடல்களை ரீமேக் செய்வதாக கூடி பலர் சொதப்புவார்கள். அதை பல மேடைகளில் ஏ.ஆர்.ரகுமான் சுட்டிக்காட்டியுள்ளார்.
அந்த வகையில் அபிசேக்ப்பச்சன் நடித்த படத்தில் வரும் மசக்கலி பாடலை ரிமேக் செய்துள்ளனர். இதற்கு வருத்தம் தெரிவிக்கும் வகையில் ஏ. ஆர். ரகுமான் இந்த பாடலின் ஒரிஜினல் வெர்சனை நீங்களே கேளுங்கள் என கூறி உள்ளார்.










