Thursday, February 22, 2024
-- Advertisement--

பிரபல பெண் இயக்குனரை பன்னி மூஞ்சி போன்று உள்ளது என விமர்சித்த நெட்டிசன் ..!! நெத்தியடி பதிலளித்த இயக்குனர் ..!!

தமிழ் சினிமாவில் விரல்விட்டு என்னும் வகையிலே பெண் இயக்குனர்கள் உள்ளனர். அதில் கவிஞர், தொகுப்பாளர், இயக்குனர் என பலமுகத் திறமை கொண்டவர் லீனா மணிமேகலை. இவர் பல முன்னணி இயக்குனர்களிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்துள்ளார்.

இவர் இயக்கும் பெரும்பான்மையான படங்கள் சர்ச்சையில் சிக்கும். கடந்த 2002 ஆம் ஆண்டு மாதம்மா என்ற ஆவணப்படத்தை இவர் இயக்கினார். அதனை தொடர்ந்து லீனா பறை, செங்கடல், அல்டர் என பலர் ஆவண படங்களை இயக்கியுள்ளார். லீனா முதன் முதலில் சினிமாவில் இயக்கிய திரைப்படம் மாடத்தி . இந்த படம் கடந்த 2021 ஆம் ஆண்டு வெளிவந்தது.

இதன் பிறகு லீனா காளி என்ற ஆவணப்படத்தின் போஸ்டரை வெளியிட்டார். அந்த போஸ்டரில் காளி வேடமடைந்த பெண் ஒருவர் சிகரெட் புகைப்பதும் கையில் எல்ஜிபிடி சமூகத்தின் கொடியை வைத்திருப்பதும் போன்று இருந்தது. இந்த புகைப்படம் பெரும் சர்ச்சை ஏற்படுத்தியது இந்த ஆவணப்படத்திற்கு கடும் எதிர்ப்பும் கிளம்பியது. கடவுளை அவமதித்ததால் லீனா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இப்படி தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கும் லீனா டு ட்விட்டரில் மிகவும் ஆக்டிவாக உள்ளார். சமீபத்தில் லீனா டுவிட்டரில் ஒரு புகைப்படத்தை வெளியிட அதற்கு ரசிகர் ஒருவர் பன்றி முகத்துடன் லீனா முகத்தை ஒப்பிட்டு இரண்டிற்கும் பெரிய வித்தியாசம் இல்லை. உங்களுக்கு குழந்தை பிறந்தால் கண்டிப்பாக அது பன்றி போல தான் இருக்கும் என கமெண்ட் செய்திருந்தார்.

இந்தத் ட்வீட்டுக்கு நெத்தியடி பதிலளித்த லீனா , “பன்றிகள் நல்லது செய்கின்றன, உன்னைப் போன்ற ஹேட்டர்கள் செய்யும் அசுத்தங்களை அவை நீக்கி சுத்தமாக்குகின்றன, பன்றிகளிடம் இருந்து கற்றுக் கொள்” என பதில் அளித்திருந்தார். லீனாவின் இந்த பதிவிற்கு ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles