கட்சி தொடங்கி தான் சந்தித்த முதல் தேர்தலிலேயே 1 கோடி ஓட்டுகளை கடந்து, தமிழக வெற்றிக் கழகம் 50 ஆண்டுகால அரசியல் வரலாற்றில் புதிய சாதனையை படைத்திருக்கிறது.
மற்ற மாநிலங்களுக்கு முன் மாதிரியாக இருப்பதில் தமிழகம் என்றுமே முன்னிலைதான்.
வளர்ச்சியில் மட்டுமல்ல, சிந்தனையிலும் புதிய உதாரணத்தை தேர்தல் கால வரலாற்றில் 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தல் உணர்த்தி இருக்கிறது.50 ஆண்டுகால திராவிட இயக்கம் மற்றும் அரசியல் கட்சிகளை எளிதாக ஓரங்கட்டி நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் புதிய தடத்தை பதித்துள்ளது.
50 ஆண்டுகால திராவிட இயக்கம் மற்றும் அரசியல் கட்சிகளை எளிதாக ஓரங்கட்டி நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் புதிய தடத்தை பதித்துள்ளது. கட்சி தொடங்கி சில ஆண்டுகள் தான் ஆனது. இந்த தேர்தல் தான் அக்கட்சி சந்திக்கும் நேரிடையான முதல் பிரம்மாண்ட தேர்தல்.
அரியணையை தன்வசப்படுத்தி ஆச்சரியம் தந்துள்ள தவெகவுக்கு இனிமேல் தான் சவால்களும், போட்டிகளும் களப்பணியில் அதிகம். மக்களின் எண்ணங்களை பூர்த்தியாக்க வேண்டும் என்பதே ஓட்டளித்தவர்களின் இமாலய எதிர்பார்ப்பு.










