காங்கிரஸ் கட்சிக்கு 2026 தேர்தலில் அமைந்தது. ராகுல் காந்தி கூட தவெக உடன் கூட்டணி சேர ஆர்வம் காட்டினார். ஆனால் உள்ளூர் காங்கிரஸ் நிர்வாகிகள் மறுத்தனர். இப்படி த.வெ.க.வுடன் கூட்டணி அமைக்காததால், சுமார் 59 ஆண்டு கால வரலாற்றுத் திருப்பத்தை காங்கிரஸ் கட்சி தவறவிட்டதாக பார்க்கப்படுகிறது.
1967ல் தொடங்கி 76 வரை திமுக ஆட்சியில் இருந்தது. நெருக்கடி நிலைக்கு பிறகு திமுகவில் இருந்துபிரிந்து வந்த அதிமுக ஆட்சியைபிடித்தது. எம்ஜிஆர் 1977 முதல் 1987 வரை முதல்வராக இருந்தார். 1989 முதல் 1991 வரை சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு மேல் திமுக ஆட்சியில் இருந்தது.ஆனால் காங்கிரஸ் அரசால் கலைக்கப்பட்டது.
தமிழகத்தில் காமராஜர் ஆட்சி அமைப்போம் என்று கூறிவரும் காங்கிரஸ் கட்சி இதுவரை தமிழகத்தில் தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. ஆகிய 2 திராவிட கட்சிகளின் முதுகில் சவாரி செய்து வந்ததால் தனித்துவத்தையே இழந்தது.
ஒருவேளை த.வெ.க. காங்கிரஸ் கூட்டணி அமைந்திருந்தால், ராகுல்காந்தியும், விஜய்யும் தமிழகத்தில் இணைந்து பிரச்சாரம் மேற்கொண்டிருந்தால் த.வெ.க. சுமார் 150 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்றிருக்கும் என்றும் காங்கிரஸ் கட்சியும் சுமார் 60 முதல் 75 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கும் என்று காங்கிரஸ் நிர்வாகிகள் கூறுகிறார்கள். அப்படி வென்றிருந்தால் துணை முதல்வர் பதவியும் கிடைத்திருக்கும்.
வாய்ப்பு சில நேரங்களில் நமக்கு வந்திருக்கும்..அந்த வாய்ப்பை தவறவிட்டால் அடுத்த வாய்ப்பு வராமலேயே போகலாம். 59 ஆண்டு காலத்திற்குப் பிறகு காங்கிரசுக்கு கிடைக்க இருந்த ஒரு பெரும் வரலாற்றுத் திருப்பத்தை காங்கிரஸ் கட்சி தவறவிட்டுவிட்டதாக காங்கிரஸ் கட்சியினர் சிலர் கூறி வருகிறார்கள்










