Tuesday, May 7, 2024
-- Advertisement--

ஆரம்பித்தது அனல் காற்று..!! என்ன செய்ய வேண்டும்!! ஒரு கூலான டிப்ஸ்.!!

கோடைகாலம் ஆரம்பிக்கும் முன்னரே தற்பொழுது சூரியனின் வெப்பமும் அதிகரிக்க தொடங்கிவிட்டது. வருட வருடம் குளிர்காலம் கார்காலம், வெயில் காலம் என பருவநிலை மாற்றங்கள் ஏற்படுவது வழக்கம்.

ஆனால் வழக்கத்துக்கு மாறாக சில வருடங்களாக மழை காலம் , குளிர்காலம், கோடை காலம் எல்லாம் பருவம் மாறி வருகிறது. இது சூழ்நிலை மாற்றத்தினாலும் நிகழ்ந்து வருகிறது.

அதுபோல அந்தந்த காலத்திற்கு ஏற்ற உணவுகளை நாம் உட்கொண்டு வந்தால் தான் அதற்கான பலன்களை நம்மால் அடைய முடியும். அதுபோல தற்பொழுது கோடை காலம் வருவதற்கு முன்னரே சூரியனின் தாக்கம் அதிகரித்து உள்ளது. இது போன்ற நேரங்களில் காலை மற்றும் மாலை வேலைகளில் வெளியே செல்ல வேண்டாம். வெயில் தாக்கம் அதிகமாக உள்ள நண்பகளில் வெளியில் செல்வதை தடுப்பது நல்லது.

குளிர் பானங்களான சாத்துக்குடி, எலுமிச்சை ஜூஸ், மோர் போன்றவற்றை அவ்வப்போது எடுத்துக் கொள்வது நல்லது. எங்கு சென்றாலும் ஒரு பாட்டிலில் தண்ணீர் எடுத்துக்கொண்டு செல்வது நல்லது. வயதானவர்கள் கர்ப்பிணி பெண்கள் பொதுவாக வெயில் காலத்தில் வெளியே செல்வதை தடுப்பது நல்லது.

அதிக நேரம் வண்டி ஓடாமல் வண்டியை நிறுத்திவிட்டு அதிக நேரம் வண்டிக்குள்ளையே இல்லாமல் வண்டி விட்டு வெளியே வருவது, பெட்ரோலை முழுவதுமாக நிரப்பாமல் இருப்பது நடந்து சென்றால் கூட குடை எடுத்துக் கொண்டோ, வண்டியில் செல்லும் பொழுது தொப்பி, அல்லது ஹெல்மெட் அணிந்து கொண்டு செல்வதும் வெயில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ளும்.

இதில் எது செய்யாவிட்டாலும் குறைந்தது தண்ணீர் அதிகமாக பருகி வந்தாலே உடல் வெப்பத்தை குறைக்க அது உதவும். இதுபோன்று செயல்களில் ஈடுபடுவதால் கோடை வெயிலில் இருந்து நாம் நம்மை ஓரளவாது பாதுகாத்துக் கொள்ளலாம் .

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles