Sunday, September 6, 2026
-- Advertisement--

சுமார் 600 கிலோமீட்டர் சைக்கிளிலேயே சொந்த ஊருக்கு சென்ற 73 வயது பாண்டியன்..!! வைரலாகும் புகைப்படம்..!!

சென்னையில் இருந்து சொந்த ஊரான நெல்லைக்கு சைக்கிளிலேயே சென்றுள்ளார் 73 வயது உள்ள பாண்டியன் என்கிற முதியவர். இவர் 40 வருடமாக கேரளாவில் பணிபுரிந்து வந்துள்ளார். பொது ஊரடங்கு காரணமாக நெல்லையில் உள்ள தனது குடும்பத்தினரை பார்க்க வந்த இவர் பொது முடக்கம் காரணமாக சென்னையிலேயே சிக்கிக் கொண்ட இவர் கடந்த 24ம் தேதி பேரனின் சைக்கிளை எடுத்துக்கொண்டு சென்னையில் இருந்து நெல்லை செல்ல புறப்பட்டார்.

இவர் முதலில் திண்டிவனம் வரை செல்ல சைக்கிளில் பயணம் தொடங்கி உள்ளார், யாரோ ஒருவர் திண்டிவனத்தில் இருந்து நெல்லைக்கு பேருந்து உள்ளது என கூறியதால் இவர் புறப்பட்டுள்ளார். அதன்பின் பேருந்துகள் இல்லை என்று தெரிந்த பின்பு சைக்கிளிலேயே தனது சொந்த ஊரான நெல்லை வரை சென்றுள்ளார். இடையில் இவருக்கும் லாரி ஓட்டுநர்கள் போன்றோர் சிறு உதவி உள்ளனர்.

பகலில் பயணம் இரவு நேரத்தில் சாலையோர உறக்கம் என சுமார் ஐந்து நாட்களில் 600 கிலோமீட்டர் வரை பயணித்து இவர் தனது சொந்த ஊரான நெல்லைக்கு சென்றுள்ளார்.

கொரோனா தாக்கம் அதிகம் அதிகம் உள்ள சென்னையிலிருந்து இவர் தன் சொந்த ஊருக்கு திரும்பியதால் அங்கு உள்ள தனது ஊரில் உள்ள கோயிலில் 15 நாட்கள் தன்னை தனிமைப்படுத்திக் கொண்ட பிறகு தற்போது தன் வீட்டில் குடும்பத்தினரிடம் அவர் இணைந்துள்ளார்.

Related Articles

Our Pride Followers

700,000FansLike
47,000FollowersFollow
5,364FollowersFollow
22,000SubscribersSubscribe
- Advertisement -

Latest Articles