தற்போதுள்ள கலியுகத்தில் எல்லாம் ட்ரெண்டிங் என்ற பெயரில் யார் யாரோ என்னென்னவோ செய்து வருகின்றனர்.கேட்டால் தற்போதுள்ள உலகிற்கு நீங்கள் மாறுங்கள் என்று பேசும் அளவிற்கு மாறிவிட்டது.
திருமணம் என்பது ஆயிரம் காலத்து பயிர், ஒரு திருமணம் செய்து பார் ஒரு வீட்டை கட்டிப்பார், என்று பழமொழி எல்லாம் தற்போது இல்லாமலே போய்விட்டது. யார் யாரை வேண்டுமானாலும் திருமணம் செய்து கொள்ளலாம் என தற்போதுள்ள காலகட்டத்தில் நடந்து வருகிறது.

பெண் பெண்ணை திருமணம் செய்து கொள்வது, ஆண் ஆணையே திருமணம் செய்து கொள்வது, அப்பா மகளை திருமணம் செய்து கொள்வது, அண்ணன் தங்கை திருமணம் செய்து கொள்வது என வித்தியாசமான திருமணங்கள் இந்த கலியுலகத்தில் தான் நடந்து வருகின்றன.
அந்த வகையில் தற்பொழுது இந்தியாவில் உள்ள உத்தர பிரதேசம் மாநிலத்தில் ஒரு வித்தியாசமான திருமணம் நடந்துள்ளது. உத்தரபிரதேசத்தை சேர்ந்த 70 வயதான முதியவர் ஒருவருக்கு நான்கு மகன்கள் உள்ளனர். இதில் மூன்றாவது மகனின் மனைவி பூஜா. தனது மூன்றாவது மகன் இறந்து விடவே பூஜா மறுமணம் செய்துள்ளார். மறுமணத்தில் அவருக்கு சந்தோஷம் இல்லை என்பதால் மீண்டும் தன் மாமனார் வீட்டிற்கு வந்துள்ளார்.

மீண்டும் மாமனார் வீட்டிற்கு வந்த மருமகள் பூஜாவை பெண் போல பார்த்துக் கொள்ளாமல் அந்த மாமனார் செய்த காரியம் தற்போது ஊர் மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.
அந்த 70 வயதான முதியவரான மாமனார், 28 வயதான பூஜா மருமகளை திருமணம் செய்து உள்ளார். இதில் ஆச்சரியம் என்னவென்றால் அந்த மருமகளுக்கும் இந்த திருமணத்தில் எந்தவித ஆட்சேபனை இல்லையாம். இருவரும் பரஸ்பரமாக முடிவெடுத்து தான் இந்த முடிவை எடுத்து உள்ளார்களாம்.
