நடிகர் ரஜினிகாந்த் மூத்த மகள் ஐஸ்வர்யா. இவர் தனது வீட்டில் 60 சவர நகைகள் திருட்டுப் போய் இருப்பதாக தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். வீட்டின் லாக்கரில் இருந்த வைரம், தங்கம் என 60 சவரன் நகைகள் அப்போது மாயமாக இருப்பதாகவும் புகாரில் தெரிவித்துள்ளார்.
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அளித்திருந்த புகார் மனுவில் கடந்த 2019 ஆம் ஆண்டு லாக்கரில் வைக்கப்பட்டிருந்த நகை மூன்று முறை வீடு மாறியும் எடுக்கப்படவில்லை. சென்னை சென்ட் மேரி சாலை வீடு, தனுஷின் சி ஐ டி நகர் வீடு, போயஸ் கார்டனில் உள்ள ரஜினிகாந்த் வீடு என லாக்கர் மாறி மாறி வைக்கப்பட்டு இருந்தது.
அந்த லாக்கரில் வைக்கப்பட்டிருந்த நகையை பற்றி வீட்டில் பணிபுரியும் மூன்று வேலைக்காரர்களுக்கு தெரியும் என்று புகார் மனுவில் தெரிவித்து இருந்தார். கடந்த மாதம் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இந்த புகாரை அளித்திருந்தார். இது குறித்து தேனாம்பேட்டை காவல் நிலைய ஆய்வாளர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
அங்கு பணிபுரிந்த வேலைக்காரர்கள் மீது போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. தற்போது ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது கணவரை விட்டு பிரிந்து இருக்கிறார். அந்த நகைகள் அனைத்தும் தனது திருமணத்திற்காக வழங்கப்பட்டதை என்றும் 18 ஆண்டுகளாக பாதுகாப்பாக இருந்த நகைகள் கடைசியாக 2019 ஆம் ஆண்டு சௌந்தர்யா ரஜினிகாந்த் திருமணத்தின்போது பயன்படுத்திவிட்டு பிறகு லாக்கரில் வைத்ததாகவும் அதன் பின் லாக்கரை திறக்காமல் வைத்திருந்த ஐஸ்வர்யா கடந்த பிப்ரவரி 10ஆம் தேதி பிறந்து பார்த்தபோதுதான் அந்த நகைகள் காணாமல் போய் இருந்ததே கண்டுபிடித்துள்ளனர்.
தீவிரமாக இந்த புகாரின் அடிப்படையில் விசாரணையை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.அதை தொடர்ந்து லால் சலாம் என்ற படத்தை இயக்கி வருகிறார். அந்த படத்தில் நடிகர் விஷ்ணு விஷால், விக்ரம் நடித்த முக்கிய கதாபாத்திரத்தில் ரஜினிகாந்த் நடிக்கிறார்.
லைக்கா நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. ஏ ஆர் ரகுமான் இசையமைக்கிறார். இப்படத்தில் காண படப்பிடிப்பு திருவண்ணாமலை நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.