சென்னை ஆர்கே நகரில் திமுக சார்பில் எளியோர் எழுச்சி நாள் என்ற பெயரில் 48 இணையர்களுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் திருமணம் நடைபெற்றது. ஒரு மணமக்களுக்கு தலா 25,000 மொழி மற்றும் கட்டில் மெத்தை பீரோ மிக்சி என முப்பது பொருட்கள் அடங்கிய சீர்வரிசை வழங்கப்பட்டது.
சென்னையில் இன்று உதயநிதி ஸ்டாலின் தலைமையில் திருமண நிகழ்ச்சி நடந்தது . அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட உதயநிதி ஸ்டாலின் தாலி எடுத்து கொடுக்க மாமியார் அந்த தாலியை வாங்கிக் கொண்டு மருமகளுக்கு கட்ட முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் நடத்தி வைத்த திருமண விழாவில் தாலியைப் பெற்று மகனிடம் கொடுப்பதற்கு பதில் மகனின் தாயே தாலியை வருங்கால மருமகளுக்கு கட்ட முயன்றதால் மேடையே ஒரே சிரிப்பலையில் அதிர்ந்தது.
இதுகுறித்து அந்த மணமகனின் பெற்றோரிடம் கேட்டதற்கு உதயநிதி ஸ்டாலின் அவர்கள் கையால் தாலி வாங்குவது எவ்வளவு பெரிய விஷயம். நான் அந்த தாலியை வாங்கிய சந்தோஷத்தில் என்னுடைய மருமகளுக்கு கட்ட சென்று விட்டேன் அதற்கு அவர் என்னம்மா நீங்க தாலி கட்டுறீங்க என்று சிரித்துக் கொண்டே கூறினார் அதன்பின் அந்த தாலியை என் பையனிடம் கொடுத்து கட்டச் சொன்னேன் என்று கூறினார். சந்தோஷத்தில் அப்படி நடந்துவிட்டது.
மணப்பெண்ணிடம் இது பற்றி கேட்கையில் மாமியார் எனக்கு தாலி கட்ட வந்த நேரம் எனக்கு பயமாக இருந்தது என்று கூறி சிரிப்பலையை ஏற்படுத்தி உள்ளார்.