சென்னையில் உள்ள வில்லிவாக்கம் பகுதியில் உள்ள கௌஸிபி என்கிற பெண், இவர் நான்கு மாத கர்ப்பிணி. பரிசோதனைக்கு முடித்துக்கொண்டு ஸ்கேன் அறிக்கையை வீட்டின் அருகில் உள்ள துணி கடையில் பணிபுரியும் கணவரிடம் காண்பித்து விட்டு ரோட்டில் நடந்து சென்று கொண்டு இருந்தார்.
அப்போது அந்த வழியே வந்த வருமானவரித்துறை புகைப்படம் ஒட்டப்பட்ட வாகனம் கௌஸிபி பின்னால் மிகவும் பலமாக மோதியுள்ளது மோசமான விபத்து காரணமாக தூரமாக வீசப்பட்ட கர்ப்பிணி அந்த இடத்திலேயே உயிரிழந்தார்.
விபத்து ஏற்படுத்திய வாகனத்தை இயக்கிய பெண்மணி அந்த இடத்தில் இருந்து தப்பி ஓடிவிட்டார். சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த திருமங்கலம் காவல் துறையினர் தப்பியோடிய பெண்ணை மிகவும் தீவிரமாக தேடி வருகின்றனர். நான்கு மாத கர்ப்பிணியான கௌசிபி விபத்தில் உயிரிழந்திருப்பது அந்த பகுதி மக்களிடையே மிகவும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.