நடிகைகளை டார்கெட் செய்யும் சத்குரு…!!! அப்போ சமந்தா இப்போ யார் தெரியுமா?

samantha sadhguru save soil

நடிகை சமந்தா தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டு இருப்பவர். சமீபத்தில் தான் தனது காதல் கணவர் நாக சைதன்யாவை விவாகரத்து பெற்று தனது திருமண வாழ்க்கையை முடித்துக் கொண்டார்.

சில நாட்கள் அமைதியாக இருந்த சமந்தா ஆன்மீக சுற்றுலா சென்று வந்தார் விவாகரத்து பற்றி பேச வேண்டாம் கொஞ்சம் எனக்கு டைம் வேண்டும் அந்த விஷயத்தில் இருந்து மீண்டு வர என்று வேண்டுகோளும் வைத்தார். அல்லு அர்ஜுனின் புஷ்பா படத்தில் இடம்பெற்று இருந்த ஓ சொல்றியா மாமா பாடலுக்கு நடனம் ஆடி இருந்தார்.

சமந்தாவின் நெளிவு சுளிவு நடனத்தை பார்க்கவே தியேட்டருக்கு படையெடுத்தார்கள் ரசிகர்கள் அந்த அளவிற்கு அந்த பாடல் பெரிய பிரபலத்தை தேடித் தந்தது. சமந்தா நயன்தாராவின் கணவர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்திருந்தார். நயன்தாரா சமந்தா இருவரும் சேர்ந்து நடித்து இருந்தாலும் சமந்தா நடித்த கதீஜா கதாபாத்திரத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

சமந்தாவின் இளமை ததும்பும் நடிப்பை பார்த்து ரசிகர்கள் சமந்தா புராணம் பாடி வந்தார்கள். சொல்லப்போனால் நயன்தாராவை விட சமந்தா அழகாக இருந்தார் சமந்தா. சமீபத்தில் சமந்தா சத்குரு அவர்களின் SAVE SOIL என்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். சமந்தா சத்குருவின் தீவிர பக்தர் என்பது அனைவரும் அறிந்ததே.

சத்குரு நடத்தும் சிவராத்திரி நிகழ்ச்சியில் சமந்தா தவறாமல் கலந்து கொள்வார் ஆனால் இந்த வருடம் அவருக்கு விவாகரத்து பிரச்சினைகள் இருந்ததால் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை.

தற்பொழுது சமந்தா சத்குரு அவர்களின் Save Soil நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தனது பங்களிப்பை அளித்தார். சத்குரு அவர்களை பேட்டி எடுத்த சமந்தா கூறியது நான் பதற்றமாக இருந்தேன் சத்குரு என் வாழ்வின் ஒரு முக்கிய அங்கம் சத்குரு அவர்களை நேர்காணல் செய்வது மிகவும் சிறப்பு வாய்ந்தது அவரது உரையாடலை விரும்பி கேட்டேன் இரண்டரை மணி நேரம் எனக்கு ஒரு மணி நேரம் போல் இருந்தது என்று கூறியுள்ளார். ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டு இந்த வீடியோவிற்கு 2.5 மில்லியன் லைக்ஸ் கிடைத்தால் சத்குரு அவர்களுடன் பைக் ரைட் செய்ய முடியும் என்று ரசிகர்களிடம் வேண்டுகோள் வைத்தார் சமந்தா.

சமந்தாவை தொடர்ந்து Save Soil நிகழ்ச்சியில் KGF கதாநாயகி ஸ்ரீநிதி சத்குரு அவர்களுடன் ஜாலியாக உரையாடி கொண்டு புகைப்படம் எடுத்து உள்ளார் தற்பொழுது அந்த புகைப்படங்கள் இணையத்தில் ஷேர் ஆகி வருகிறது.

Save Soil போன்ற நிகழ்ச்சிகளை ப்ரொமோட் செய்ய நடிகைகளை டார்கெட் செய்கிறார் சத்குரு என்று கூறி வருகிறார்கள் நெட்டிசன்கள்.