திரை உலக வாரிசு விஜயின் பிறந்தநாளில் வாழ்த்து சொன்ன பிரபல அரசியல் வாரிசுகள்..!!! நாளுக்கு நாள் கூடிக்கொண்டே போகும் விஜயின் அரசியல் மவுசு.

thalapathy vijay birthday wishes

தளபதி விஜய் நாற்பத்தி எட்டாவது பிறந்த நாளை முன்னிட்டு பிரபலங்கள் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் அனைவரும் தங்களது வாழ்த்தினை தெரிவித்து வந்தனர். விஜய் பிறந்தநாளை அவரது ரசிகர்கள் நலத்திட்ட உதவிகள் செய்து மிக சிறப்பாகக் கொண்டாடி உள்ளனர்.

விஜய்யின் பிறந்தநாள் நலத்திட்டங்களை பார்க்கையில் ஒரு அரசியல் கட்சியின் நலத்திட்ட உதவி போல இருந்தது அந்த அளவு பிரம்மாண்டமாக அவரது ரசிகர்கள் ஒன்றிணைந்து அரசு பள்ளியில் படிக்கும் குழந்தைகள் மற்றும் ஆதரவற்றோர் இல்லத்தில் உதவி செய்து வந்துள்ளனர்.

ஒரு சில ரசிகர்கள் அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களின் மேற்படிப்பு செலவை ஏற்று உள்ளார்கள். பிரபலங்கள் தொடர்ந்து பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவித்து வந்த நிலையில் ஒரு சில பிரபலங்கள் வாழ்த்து பலரையும் ஆச்சரியப்படுத்தியது.

குறிப்பாக உதயநிதி ஸ்டாலின் விஜய் அவர்களின் தீவிர ரசிகர் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. முதல் படம் விஜயை வைத்து தயாரிக்க வேண்டும் என்று பிடிவாதமாக இருந்த அவர் குருவி படத்தை முதன்முதலாக ரெட் கெய்ன்ட் மூவிஸ் வழியாக தயாரித்தார். விஜய் மீது பெரிய அன்பு கொண்டவர்.

தமிழ்நாடு முதல்வரின் மகன் விஜய்யின் பிறந்தநாள் தினத்தில் எப்படி வாழ்த்து சொல்லப்போகிறார் என்று அனைவரும் எதிர்பார்த்த நிலையில் உதயநிதி ஸ்டாலின் ஹாப்பி பர்த்டே தளபதி விஜய் அண்ணா என்று வாழ்த்தினை கூறினார். ரசிகர்கள் உங்களது தந்தையை அனைவரும் தளபதி என்று கூறிவரும் நிலையில் விஜய்யை நீங்கள் தளபதி என்று கூறியிருப்பது உங்கள் பெருந்தன்மையை காட்டுகிறது என்று கூறிவந்தனர்.

அதுபோல தயாநிதிமாறன் அவர்கள் ஆதி திரைப்படத்தின் சூட்டிங் போது டெல்லியில் விஜய்யை அழைத்து ஸ்டாப் வெளியிட்டார் அந்த புகைப்படத்தை பதிவிட்டு இன்று பிறந்தநாள் காணும் நடிகர் திரு விஜய் அவர்களுக்கு இனிய நல் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

அதனை தொடர்ந்து நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் அவர்கள் தனது இயல்பான நடிப்பாலும், நளினமான நடனத்தாலும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்துத்தரப்பு மக்களின் உள்ளங்களையும் கவர்ந்து தமிழ்த்திரையுலகின் உச்ச நட்சத்திரமாக மிளிரும் அன்புத்தம்பி விஜய் அவர்களுக்கு எனது உளம் நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துகள்! என்று கூறி இருந்தார்.

இன்று பிறந்த நாள் காணும் அன்பு அண்ணன் விஜய் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் என்று காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த வாழ்த்தியுள்ளார்.

அரசியலில் தளபதி என்றால் அது முதல்வர் ஸ்டாலின் அவர்கள் தான். திரை உலக தளபதி என்றால் அது விஜய் தான் என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.