என்றும் குறையாத காதல்..!!! அன்பு மனைவி ஜோவுடன் TOUR சென்றுள்ள சூரியா..!!! கியூட் புகைப்படங்கள்.

suriya jyothika tour pic

சூர்யா ஜோதிகா இருவரும் காதலிக்கத் தொடங்கிய நாட்களில் இருந்து இன்று வரை இவர்களது காதல் குறையாமல் இருந்து வருகிறது சினிமாவில் அறிமுகமாவதற்கு முன் டெக்ஸ்டைல் கம்பெனி ஒன்றில் வேலை பார்த்து வந்த சூர்யா சினிமாவில் நேருக்கு நேர் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார்.

விஜய் சூர்யா இணைந்து நடித்த அந்த திரைப்படம் மாபெரும் வெற்றியை பெற்றது அதனைத்தொடர்ந்து நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வந்த சூர்யா. அந்த நேரத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்த ஜோதிகாவை காதலித்து வந்தார் ஜோதிகாவுடன் பூவெல்லாம் கேட்டுப்பார் படத்தில் இணைந்து நடித்த சூர்யா ஜோதிகாவின் நட்பு ஏற்பட்டு நாளடைவில் இருவரும் தீவிரமாக காதலித்து வந்தார்கள்.

வீட்டில் தனது காதலை சொல்ல தயங்கிய சூர்யா தனது அன்புத் தம்பி கார்த்தி இடம் கூறியுள்ளார் அதன்பின் தனது தந்தை சிவகுமார் அவர்களிடம் ஜோதிகாவை காதலிப்பது பற்றி கூறியுள்ளார் சூர்யா. இருவரும் பல வருடங்களாக தங்களது காதலில் உறுதியாக இருந்ததால் சிவகுமார் அவர்களும் ஜோதிகாவை சூர்யா திருமணம் செய்ய ஒப்புக் கொண்டார்.

தற்பொழுது சூர்யா ஜோதிகா தியா, தேவ் என்ற இரு பிள்ளைகள் உள்ளனர். சமீபத்தில் சூர்யா நடித்து வெளியான ஜெய்பீம் திரைப்படம் மாபெரும் வெற்றியை பெற்றது அதனை தொடர்ந்து சூர்யா கமலஹாசனின் விக்ரம் திரைப்படத்தில் ரோலக்ஸ் என்ற கதாபாத்திரத்தில் படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் நடித்திருந்தார்.

இந்த காட்சி ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்றது விக்ரம் மூன்றாம் பாகத்தில் ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். பாலாவின் புதிய படம் மற்றும் வெற்றிமாறனின் வாடிவாசல் என்று அடுக்கடுக்காக படங்களை கமிட் செய்துள்ள சூர்யா தனது ஓய்வு நேரத்தில் தனது குடும்பத்துடன் வேறு இடங்களை சுற்றிப் பார்க்க வருகிறார் .

சூர்யா ஜோதிகா சென்ற புகைப்படங்கள் இணையத்தில் அவரது ரசிகர்களால் பகிரப்பட்டு வருகிறது. அதனைப் பார்த்த ரசிகர்கள் இன்றும் காதல் குறையாத ஜோடியாக இருக்கிறார்கள் திருஷ்டி சுத்தி போடுங்க என்று கூறி வருகிறார்கள்.