25 ஆண்டுகள் பிச்சை எடுத்தவருக்கு, 55 வயதில் கிடைத்த ஆசிரியர் பணி…!!! நெகிழ்ச்சியான சம்பவம்.

andhra pradesh

ஆசிரியர் பயிற்சி தேர்வு முடிவு நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில் 25 ஆண்டுகள் பிச்சை எடுத்து காலம் தள்ளியவருக்கு நீதிமன்ற தீர்ப்பால் ஆசிரியர் பணி நியமனம் கிடைத்த சம்பவம் ஆந்திராவில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திரா மாநிலம் ஸ்ரீகாகுளம் சிடி கிராமத்தை சேர்ந்தவர் கேதாரேஸ்வர ராவ். இவருக்கு வயது 55 . இவர் 1998 ஆம் ஆண்டில் டிஎஸ்சி ஆசிரியர் வாரிய தேர்வு எழுதினால் பல்வேறு காரணங்களால் தேர்வு முடிவுகளை அரசு நிறுத்தி வைத்தது. இதனால் அவர் சைக்கிளில் சென்று துணி விற்று வந்தார்.

இது கை கொடுக்காமல் போகவே 25 ஆண்டுகளாக பிச்சை எடுத்து வந்தார். இந்நிலையில் நீதிமன்ற உத்தரவின்படி தேர்வு முடிவுகள் வெளியானது. இதில் தேர்ச்சி பெற்றவர்களின் பட்டியலில் இவரது பெயர் இருந்ததை பார்த்த அப்பகுதி இளைஞர்கள் இவருக்கு ஆசிரியர் பணி கிடைத்திருப்பதை தெரிவித்து.

புத்தாடைகளை வாங்கிக் கொடுத்து விரைவில் ஆசிரியர் பணியில் சேர வாழ்த்தினர். இதைக் கேட்ட அவர் மகிழ்ச்சி அடைந்தார்.