ஹனிமூனிற்கு வெளிநாட்டிற்கு பறந்த நயன்-விக்கி ஜோடி…!!! எந்த நாட்டிற்கு தெரியுமா.?

nayanthara

தமிழ் சினிமாவில் பல பிளாக்பஸ்டர் திரைப்படங்களில் நடித்த கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்டவர் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா. நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவருக்கும் சமீபத்தில் கடந்த ஜூன் மாதம் 9ஆம் தேதி மகாபலிபுரத்தில் பிரமாண்டமாக திருமணம் நடைபெற்றது.

இவர்களது திருமணத்தில் ரஜினிகாந்த், ஷாருக்கான், சூர்யா, கார்த்தி உள்ளிட்ட திரை பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு வாழ்த்துக்களை தெரிவித்தனர். இவர்களின் திருமணத்தை தனியார் ஓடிடி ஒளிப்பதிவு செய்ய உரிமம் பெற்றிருந்தது.

இருவரும் கடந்த 7 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இவர்கள் திருமணம் முடிந்த கையோடு திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்தனர். அதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து நன்றி தெரிவித்தனர். மேலும் கேரளாவில் உள்ள நயன்தாரா இல்லத்திற்கு ஜோடியாக இருவரும் சென்றனர்.

இன்னிலையில் இவர்கள் இருவரும் தாய்லாந்து நாட்டிற்கு தேன்நிலவு சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டோரில் வீடியோ மற்றும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

இந்த நிலையில் நயன்தாரா விக்னேஷ் சிவன் இருவரும் தாய்லாந்து நாட்டிற்கு ஹனிமூன் சென்றுள்ளதாக கூறப்படுகிறது.