பிரமாண்டமாக உருவாகி வரும் தளபதி விஜயின் அடுத்த படத்தின் பர்ஸ்ட் லுக் எப்ப தெரியுமா…!!! அதிகாரபூர்வ அறிவிப்பு இதோ.

thalapathy vijay next mive first look

தளபதி விஜய் நடித்து சமீபத்தில் வெளியான திரைப்படம் தான் பீஸ்ட் இந்த திரைப்படம் விமர்சனம் ரீதியாக பெரிய வெற்றி பெறவில்லை என்றாலும் கலெக்ஷன் ரீதியாக ஹிட் படமாக அமைந்தது. பீஸ்ட் திரைப்படம் விஜய் ரசிகர்களை திருப்திப்படுத்தவில்லை என்பது தான் உண்மை இயக்குனர் நெல்சன் டார்க் ஹுமர் காமெடியில் கலக்கி இருப்பார் என்று எதிர்பார்த்து வந்த ரசிகர்களுக்கு பெரிய ஏமாற்றம்.

விஜய்யை நெல்சன் சரியாக பயன்படுத்தவில்லை என்பது பலரது குற்றச்சாட்டாக இருந்தது இந்நிலையில் சமீபத்தில் விஜய்யின் தாயார் ஷோபா அவர்கள் ஒரு யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் இத்திரைப்படத்தை நான் பார்த்துவிட்டு என்டர்டைனாக இருக்கிறது என்று விஜய்யிடம் சொன்னேன் விஜய் கூட படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வருகிறது இன்னும் சில நாட்கள் போனால் தான் நிலவரம் தெரியும் என்று கூறியிருந்தார் என்று சோபா அவர்கள் கூறியுள்ளார்கள்.

விஜயின் தந்தை பீஸ்ட் திரைப்படத்தில் ஹீரோ இருந்தார் இசையமைப்பாளர் இருந்தார் ஸ்டன்ட் மாஸ்டர் இருந்தார்கள் ஒளிப்பதிவாளர் இருந்தார்கள் ஆனால் இயக்குனர் இல்லை என்று பகிரங்கமாக நெல்சன் மீது குற்றச்சாட்டை வைத்தார்.

விஜய் விமர்சனங்கள் அனைத்தையும் மனதில் வைத்துக்கொண்டு வம்சி இயக்கும் தளபதி 66 படத்தில் நடிக்க தயாரானார் விஜய். தற்பொழுது தளபதி 66 படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்க சென்னையில் உள்ள கோகுலம் ஸ்டுடியோவில் சில காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது படத்தில் விஜய் ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், பிரபு, பிரகாஷ் ராஜ் பாடகர் கிருஷ் மனைவி, சங்கீதா, குஷ்பூ போன்ற நட்சத்திரப் பட்டாளமே நடித்து வருகின்றனர் இந்த திரைப்படம் குடும்பங்களை கவரும் படமாக இருக்கும் என்று கூறி வரும் நிலையில் ஆக்சன் காட்சிகள் மட்டுமல்லாமல் விஜய்யின் நடிப்பை வெளிக்கொண்டு வரும் திரைப்படமாக இருக்குமென்று செய்திகள் வந்து கொண்டிருக்கிறது.

விஜயின் மூத்த சகோதரராக நடிகர் ஷாம் நடித்து வருகிறார் இந்த படம் 2023 ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாக உள்ள நிலையில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வருகின்ற ஜூன் மாதம் 21ஆம் தேதி வெளியிட உள்ளார்கள் படக்குழுவினர் அதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பை இன்று வெளியிட்டு உள்ளார்கள்.