திருப்பதியில் நாமத்துடன் பக்திமயமாக போஸ் கொடுத்த ஷிவானி நாராயணன்…!!! அடேங்கப்பா ஷிவானியா இது..!!!

shivani narayanan in tirupati

ஷிவானி நாராயணன் பகல் நிலவு என்ற சீரியலில் ரசிகர்களின் மனதை கவர்ந்தவர். அந்த சீரியலில் சினேகா என்ற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார் அதனைத் தொடர்ந்து பகல் நிலவு சீரியலில் ஜோடியாக நடித்த அசீம் என்பவருடன் கடைக்குட்டி சிங்கம் என்ற சீரியலில் நடித்து வந்தார் ஷிவானி நாராயணன். அசீம் ஷிவானி பற்றி தொடர்ந்து கிசுகிசுக்கள் எழுதப்பட்டுள்ளதால் அந்த சீரியலை விட்டு வெளியேறினார் ஷிவானி.

அதன்பின் ரெட்டை ரோஜா என்ற சீரியலில் நடித்து வந்த ஷிவானி திடீரென்று அந்த சீரியலை விட்டு வெளியேறினார். அடிக்கடி சமூக வலைத்தளத்தில் வெளியிடும் தனது புகைப்படங்களை வித விதமாக வெளியிட்டு வந்தார். அதனை பார்ப்பதற்காகவே ரசிகர்கள் ஆர்வத்துடன் இருந்தனர் அந்த அளவிற்கு ஷிவானி பதிவிடும் புகைப்படங்கள் ரசிகர்களை சுண்டி இழுத்தது.

சின்ன திரையில் தலைகாட்டி வந்த ஷிவானி வெள்ளித்திரையில் கமலஹாசனின் விக்ரம் திரைப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்திருந்தார். தற்பொழுது ஹீரோயினாக நடிக்க கதை கேட்டு வரும் ஷிவானி இன்று திருப்பதி சென்றுள்ளார்.

அங்கு உள்ள சாலையோர கடைகளில் ஷாப்பிங் செய்த ஷிவானி நாமம் போட்டுக்கொண்டு பக்தி மயமாக போஸ் கொடுத்துள்ளார் இந்த புகைப்படங்கள் இணையத்தில் அவரது ரசிகர்களால் பகிரப்பட்டு வருகிறது.