பிரபல கட்சியில் இணைகிறாரா திரிஷா…!!! வெளியான தகவல்..!!!

trisha in politics

பிரபல நடிகை திரிஷா ஜோடி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் ஜோடி படத்தில் சிம்ரனுக்கு தோழியாக நடித்திருந்தார். அதனை தொடர்ந்து லேசா லேசா என்ற படத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார் அதுமட்டுமல்லாமல் அடுத்தடுத்து வெளியான திரைப்படங்கள் தமிழில் பெரிய வரவேற்பை த்ரிஷாவிற்கு கொடுத்தது.

தற்பொழுது திரிஷா தனக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரம் அமைந்த திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். தமிழில் மாபெரும் எதிர்பார்ப்பு கொண்ட திரைப்படம் தான் பொன்னியின் செல்வன் இந்தப் படத்தில் த்ரிஷா குந்தவை என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் கோடம்பாக்கத்தின் தற்போதைய ஹாட் டாபிக் என்னவென்றால் திரிஷா அரசியலுக்கு இறங்குகிறார் என்பது தான் அரசியலுக்கு வருகிறார் என்ற செய்தி வந்தவுடன் அவர் எந்த கட்சியில் இணையப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் நிலவி வரும் வேளையில் திமுக அல்லது அதிமுகவில் இணைவார் என்று ஒரு பக்க தகவல் வந்து கொண்டிருந்தது ஆனால் திரிஷா பிஜேபி அல்லது காங்கிரஸ் கட்சியில் தான் இணைய உள்ளார் என்ற மற்றொரு தகவலும் வெளிவந்து கொண்டிருந்தது.

திரிஷாவின் நெருங்கிய வட்டாரத்தில் பிஜேபிக்கு செல்லவில்லை காங்கிரஸ் கட்சி தான் செல்ல இருக்கிறார் என்றெல்லாம் தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கிறது.

நடிகர் நடிகைகளை பாஜக கட்சியினர் தங்களது கட்சிக்குள் கொண்டு வந்து கொண்டிருக்கும் நிலையில் திரிஷா காங்கிரஸில் இணைவதாக வந்திருக்கும் தகவல் எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை விரைவில் தெரியவரும் என்று கூறுகிறார்கள் சினி வட்டாரத்தினர்.