தனது மேனஜர் மகளின் திருமணத்திற்கு நேரில் சென்று வாழ்த்திய சூர்யா ஜோதிகா…!!! அட இன்னும் செம கியூட்டா இருக்காங்களே சூர்யா ஜோதிகா..!!!

surya jyothika manager

தமிழ் சினிமாவை பொருத்தவரை பொருத்தமான ஜோடி என்றால் கண்டிப்பாக சூர்யா-ஜோதிகா ஜோடி தான் என்று அனைவரும் கூறுவார்கள். அந்த அளவிற்கு இருவரும் பொருத்தமாக இருப்பார்கள் ஏன் திருமணத்திற்குக் கூட சூர்யா ஜோதிகா திருமணத்தின் போது ஜோதிகா அணிந்திருந்த பட்டு புடவை போல புடவை எடுக்க வேண்டும் மாலை ஆர்டர் செய்ய வேண்டும் என்று இன்றும் ஒரு எடுத்துக்காட்டாக அவர்களுடைய திருமணம் நடந்தது அனைவருக்கும் தெரியும்.

சூர்யா ஜோதிகாவின் காதலை முதலில் ஏற்றுக்கொள்ள முடியாத சூழ்நிலையில் இருந்த சூர்யாவின் தந்தை சிவக்குமார் இருவரும் பிடிவாதமாக இருந்ததால் கடைசியில் திருமணத்திற்கும் ஒப்புக்கொண்டார்.

ஜோதிகாவும் திருமணத்திற்குப் பிறகு நடிப்பதை விட்டு விட்டு குடும்ப பொறுப்பை ஏற்று தனது பிள்ளைகளுக்கு வழிகாட்டியாக இருந்தார். தேவ் திவ்யா என இரு குழந்தைகள் சூர்யா-ஜோதிகா இருக்கிறார்கள்.

குழந்தைகள் வளர்ந்த பின் சினிமாவில் WOMEN CENTRIC கதாபாத்திரங்கள் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வரும் ஜோதிகா நல்ல கதையம்சம் இருந்தால் நிச்சயம் நடிப்பேன் என்று நல்ல கதைகளை கேட்டு வருகிறாராம்.

இன்று சூர்யாவின் மேனேஜர் தங்கதுரை அவர்களின் மகளுக்கு திருமணம் நடைபெற்று வருகிறது. தன்னுடைய மேனேஜர் மகள் திருமண வரவேற்பில் சூர்யாவும் ஜோதிகாவும் ஒன்றாக சேர்ந்து வந்து நேரடியாக மணமகளை வாழ்த்தி சென்றுள்ளார்களாம்.

சூர்யாஜோதிகா திருமண மண்டபத்திற்குள் நுழைந்தவுடன் அனைவர் பார்வையும் சூர்யா-ஜோதிகா மீதுதான் இருந்ததாம் அந்த அளவிற்கு செம க்யூட்டாக இன்னும் இருக்கிறார்களாம் சூர்யா ஜோதிகா.