தாயான பிறகும் கொஞ்சம் கூட குறையாத அழகு…!!! புகைப்படங்கள் இதோ.

sayyesha

நடிகை சாயிஷா தமிழ் சினிமாவிற்கு வனமகன் என்ற படத்தின் மூலம் அறிமுகமாகி முதல் படத்திலேயே ரசிகர்களை கவர்ந்தார். இவருடைய நடன அசைவுகளை பார்த்து ரசித்த ரசிகர்கள் தமிழ் சினிமாவிற்கு நன்றாக நடனமாடும் நடிகை கிடைத்துவிட்டார் என்று சந்தோஷப் பட்டனர்.

அதன்பின் இயக்குனர் பாண்டியராஜ் அவர்கள் இயக்கத்தில் கடைக்குட்டி சிங்கம் என்ற படத்தில் நடித்து இருந்தார். அந்தப் படமும் மாபெரும் வெற்றி பெற்று நல்ல வசூலை செய்தது. சூர்யாவுடன் காப்பான் படத்தில் நடித்திருந்தார். அதே படத்தில் ஆர்யாவும் நடித்திருந்தார்.

ஆர்யாவும் அந்த நேரத்தில் தான் பெண் தேடும் படலத்தை தனியார் தொலைக்காட்சியின் மூலம் தொடங்கினார் 15 பெண்களுடன் பழகி பார்த்து அதில் மூன்று பெண்களை தேர்ந்தெடுத்து. அதில் ஒருவரை திருமணம் செய்து கொள்வேன் என்று கூறிய ஆர்யா திடீரென்று அனைவருக்கும் டாட்டா காட்டினார். அதனை பார்த்த ரசிகர்கள் கோபம் அடைந்தனர்.

சில மாதங்கள் கழித்து ஆர்யா சாயிஷா காதலித்து வருவதாகவும் விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் தகவல்கள் வெளிவந்தது. இதனை பலர் மறுத்து வந்த நிலையில் திடீரென்று ஆர்யா சாயிஷா நாங்கள் காதலிக்கிறோம். விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போகிறோம் என்று தெரிவித்தார்கள். ஆர்யா சாயிஷா திருமணம் 2019ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் நடைபெற்றது.

அப்பொழுது ஆர்யாவிற்கு அரியனா என்ற பெண் குழந்தையும் உள்ளது. பிரசவ நேரத்தில் உடல் இடை கூடிப்போய் குண்டாக இருந்த சயீஷா தற்பொழுது உடற்பயிற்சி செய்து கனகச்சிதமாக ஸ்லிம்மாக இருக்கிறார்.